இந்தியா முழுமையும் மே 31 வரை ஊரடங்கு தமிழ்நாட்டின் நிலை என்ன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

இந்தியா முழுமையும் மே 31 வரை ஊரடங்கு தமிழ்நாட்டின் நிலை என்ன

முக்கிய விவரங்கள்


சென்னை, மே18 கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப் படுத்தும் வகையில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் (18.5.2020) மே 31 வரை நாடுமுழுவதும் மத்திய அரசால் ஊர டங்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் மே31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:


மத்திய அரசு, இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊர டங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமல் படுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊர டங்கை அமல்படுத்தியது.


மேலும், மத்திய அரசு இந்த ஊரடங்கை 17.5.2020 வரை (நேற்று) நீட்டித்து உத்தரவு பிறப்பித்ததை பின்பற்றி தமிழ்நாடு அரசும் இதை நடைமுறைப்படுத்தியது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி மாவட்ட ஆட்சி யர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப் படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 14 ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத் துகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவுகளின் அடிப்படையிலும், கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், ஊர டங்கு உத்தரவு வருகிற 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரை முறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.


ஏற்கெனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அம லில் இருக்கும்: ஏற்கெனவே நடை முறையில் உள்ள கட்டுப்பாடுகள்.


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள் ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரி யலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கெனவே நடை முறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.


நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.


தமிழ்நாடு முழுவதும் நோய் கட் டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழு மையாக கடைபிடிக்கப்படும்.


பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப் பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.


பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுப்பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப் பட்ட பணிகளுக்கு அனுமதி தொடரும்.


புதிய தளர்வுகள்: ஊரடங்கை படிப் படியாக விலக்குவதற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின்படி கீழ்க்கண்ட தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது:


கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக் கோட்டை, திருச்சிராப்பள்ளி, திரு வாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்க்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. மாவட்டங்களுக் குள் இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கலாம்.


மாவட்டத்திற்குள் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனு மதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியா வசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்.


அரசு பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக பட்சமாக 20 பேரும், வேன்களில் 7 பேரும், பெரிய வகை கார்களில் 3 பேரும், சிறிய கார்களில் 2 பேரும் (வாகன ஓட்டுநர் தவிர) செல்ல அனு மதிக்கப்படுகிறது.


மாவட்டங்களுக்குள் போக்கு வரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் இ--பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்சிவாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.


தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் 100 சதவீத பணியாளர்களை பயன்படுத்தலாம்.


மூடப்பட்டிருக்கும் தனியார் மற் றும் வியாபார நிறுவனங்களின் அத் தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர் களுடன் இயங்குவதற்கு அனுமதி.


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெறலாம்.


தேசிய மற்றும் சர்வதேச விளை யாட்டு போட்டிகளுக்கு தனி பயிற்சி யாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இதற்காக சம் பந்தப்பட்ட ஆட்சியர்களிடம், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.


மாவட்டங்களுக்குள் போக்கு வரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட் டங்களில் இ-பாஸ் உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்சி, ஆட் டோவுக்கு மட்டும் விலக்களிக்கப் படுகிறது.


நோய் தொற்றின் பரவலை தமிழ் நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய் தொற்று குறைய குறைய, தமிழ்நாடு அரசு மேலும் தளர்வுகளை அறிவிக்கும்.


டில்லியில் இருந்து இந்த வாரம் இரண்டு முறை ராஜதானி விரைவு ரயில் இயக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வாரத்திற்கு 2 நாட்கள் இந்த விரைவு ரயில் இயக்க மத்திய அரசின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக் கப்படும்.இதனால் தமிழக மக்களின் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். மேலும் பொருளாதாரமும் உயரும் என்று பொருளாதார நிபுணர் கள் கூறுகின்றனர்.


1 பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.


2 வழிபாட்டிடங்களில் பொதுமக் கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.


3 பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்டஅரங்குகள் போன்ற இடங்கள்.


4 அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.


5 பொதுமக்களுக்கான விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது. (மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில், பொது பேருந்து போக் குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்)


6 டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஓடாது.


7 மெட்ரோ ரயில்/ மின்சார ரயில் சேவை இருக்காது.


8 தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் திறக்க அனுமதியில்லை.


9 இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.


10 திருமண நிகழ்ச்சிகளுக்கு தற் போதுள்ள நடைமுறைகள் தொடரும்.


தொழிற்சாலையில் 100 பேருக்கு அனுமதி:


சென்னை காவல்துறை எல்லைக் குட்பட்ட பகுதிகளை தவிர தமிழ்நாட் டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 பேருக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலை களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 பேருக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில், 100 சதவீதம் பணியாளர்களும், 100 பேருக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment