‘விடுதலை' வாசக நேயர்களுக்கு -  மகிழ்ச்சியான அறிவிப்புகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

‘விடுதலை' வாசக நேயர்களுக்கு -  மகிழ்ச்சியான அறிவிப்புகள்!


‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்ற பழமொழிக்கேற்ப ‘விடுதலை' நான்கு பக்கங்களாகக் குறுகினாலும், கருத்து, கொள்கை விளக்கம் - மக்களுக்கு அறிவுறுத்தும் விளக்கங்களுக்கு எந்த குறையுமின்றி உலகெங்கும் இணைய வழி அதன் லட்சியப் பயணம் தொய்வின்றித் தொடருகிறது!


நாளைமுதல் வருங்காலங்களில் புதிய அம்சங்களும், ‘விடுதலை'க்கு மேலும் பொலிவூட்டும்.


ஆசிரியர் எழுதும் (வாரம் இருமுறை) புதிய கட்டுரைத் தொடர்,


"வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள்!"


‘‘ஒற்றைப் பத்தி'' மீண்டும் தொடருகிறது.


ஆங்கில நாளேடுகள் பலவற்றிலும் உள்ள கட்டுரை - தலையங்கம் - செய்திகளின் பிழிவுகள் கேப்சூல்களாக தமிழில் குடந்தை கருணா அன்றாட பிற செய்திச் சாரல் ‘ஏட்டு திக்குகளிலிருந்து' (ஏடு - ஏட்டுத் திக்கு - புது சொல்லாக்கம் - புரிந்துகொள்க) என்ற தலைப்பிலும் இடம்பெறும்.


இவை 86 ஆம் ஆண்டை நோக்கிய ‘விடுதலை'யின் மகுடத்தில் பதிக்கப்படும் புதிய ஒளிமுத்துகள்!


‘விடுதலை'யைப் பரப்புங்கள் -


அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சுங்கள்!


No comments:

Post a Comment