ஊரடங்கால் ஏற்பட்ட நன்மை:  செய்திகளை பார்க்கும் பழக்கம்  அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 18, 2020

ஊரடங்கால் ஏற்பட்ட நன்மை:  செய்திகளை பார்க்கும் பழக்கம்  அதிகரிப்பு

புதுடில்லி, மே 18, கரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக நீட்டிக் கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 53 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ஆம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் 4ஆம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். 4ஆம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


இதற்கிடையே, ஊரடங்கு காரண மாக அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்து ஊழியர்கள் செய்து வருகின் றனர். இது தொடர்பாக சைபர் பாது காப்பு நிறுவனம் காஸ்பர்ஸ்கி வெளி யிட்ட அறிக்கையில், வீட்டில் பணி யாற்றும் ஊழியர்களில், 55 விழுக்காட் டினர் முன்பை விட தற்போது செய்தி களை பார்க்கும் படிக்கும் பழக்கம் அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளது. அதோடு தனிப்பட்ட வேலைகளுக்கும் அலுவலக லாப்டாப்பை பயன்படுத்தும் செயல் அதிகரித்துவிட்டதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.


31 சதவீதம் பேர் அலுவலகத்தைக் காட்டிலும் வீட்டில்தான் அலுவலக வேலையை கூடுதல் நேரம் செய்வதாக வும் அதேசமயம் 46விழுக்காட்டினர்  தங்களின் தனிப்பட்ட நேரத்திற்கு எடுத்துக்கொள்ளும் நேர அளவு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளர். அதுமட்டுமன்றி வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாத நெருக்கடி நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.


கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்


இரா.முத்தரசன் அறிவிப்பு


சென்னை,மே18, கரோனா கால நிவாரண கோரிக்கைகளை அலட் சியப்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண் டித்து நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள் ளார்.  கரோனா கால நெருக்கடிகளை சமாளிக்க தொழிலாளர்கள் அனைவ ருக்கும் தலா 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் திட்டத்தை சீர்குலைக்கக் கூடாது. நகர்ப்புற மக்களுக்கு தனியாக வேலை உறுதியளிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். ஒரு மனித வேலை நாள்  என்பது 8 மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக உயர்த்தும் திட்டத்தை கை விட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


 


 


No comments:

Post a Comment