தந்தைபெரியாரின் தொலைநோக்கு சிந்தனைகள், போராட்டங்கள், தமிழர் தலைவரின் ஓய்வறியா உழைப்பால் தமிழினம் பயன் பெற்றுள்ளது
கழகத் துணைத் தலைவர் கருத்துரை
வேலூர், மே 8 வேலூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் 24.4.2020 அன்று மாலை 6.30 மணிக்கு காணொலி வழியாக உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ. சிவக்குமார் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். நிகழ்வில் பங்கேற்ற கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் அறிவாசான் தந்தை பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் அய்ந்து மணி நேரம் வரை கூட்டங்களில் மணவிழாவில் தந்தை பெரியார் பேசிய சிறப்புகளையும், அய்யா நடத்திய போராட்டம் எத்தகைய பயனை நமக் குத் தந்துள்ளது என்பதையும், தந்தை பெரியார் நமக்கு அளித்திட்ட தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பு திட்டமிடல், கரோனா ஊர டங்கில் கழகத் தோழர்களுக்கு அளித்து வரும் ஊக்கத்தினையும் விளக்கி நாற்பது நிமிடங்கள் கருத்துரை வழங்கி அனைவரும் நலம்காண வேண்டுமென கேட்டுக் கொண்டார். தோழர்கள் அள வற்ற உற்சாகமடைந்தனர். நிறைவாக மாணவர் கழக அமைப்பாளர் ஜெ.ஓவியா நன்றி கூறினார்.
நிகழ்வில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேரகன், மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.செய ராமன், மாநில மகளிரணிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி, பெரியார் மருத்துவர் அணி மாநிலச்செயலாளர் மருத்துவர் பழ.செகன்பாபு, மண்டலத் தலைவர் வி.சடகோபன், மாவட்டச் செயலாளர் கு.இளங்கோவன், பகுத்தறி வாளர் கழக மாவட்டத்தலைவர் இர.அன்பரசன், மாவட்டச்செயலாளர் க.அருள்மொழி, மாவட்ட அமைப்பாளர் வே.தங்கராசு, மாவட்ட துணைச் செயலாளர் அ.துரைசாமி, வேலூர் மாநகரத் தலைவர் ந.சந்திரசேகரன், மாநகரச் செயலாளர் உ.விசுவநாதன், மாவட்ட மகளிரணித்தலைவர் க.ஈஸ் வரி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ச.கலைவாணி, பொதுக்குழு உறுப்பினர் கண்மணிபழனியப்பன், மாவட்ட மகளிர் பாசறைச்செயலாளர் தி.அனிதாதாரணி, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் தி.அனிதா மகளிர் பாசறைத்தலைவர் சி.லதா, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் வ.இரவிக்குமார், பெரியார் பெருந்தொண்டர் தி.க.சின்னதுரை, எழுத்தாளர் சி.செந்தமிழ்சரவணன், ஆற்காடு நகரத்தலைவர் கோ.விநாய கம், அணைக்கட்டு ஒன்றிய அமைப் பாளர் கோ.இரவீந்திரன், நகர அமைப் பாளர் வி.மோகன், மாவட்ட மாணவர் கழகத்தலைவர் வி.சி.தமிழ்நேயன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் செந்தமிழ் இன்மொழி, மாவட்ட இளை ஞரணித் தலைவர் பொ. தயாளன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment