பழனி, திண்டுக்கல், மதுரைமாநகர், புறநகர், தேனி, விருதுநகர் மாவட்டங்கள் பங்கேற்பு
மதுரை,மே.8, பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டங்கள் காணொலி மூலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பகுத்தறிவாளர் கழக மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் 25.4.2020 சனி காலை 10.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற்றது. பகுத் தறிவாளர் கழக மாநிலத் தலைவர்
மா.அழகிரிசாமி, பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச் செல்வன் ஆகியோரின் சீரிய ஏற் பாட்டில் பழனி, திண்டுக்கல், மதுரை மாநகர், புறநகர், தேனி, விருதுநகர் மாவட் டப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கா.நல்லதம்பி நிகழ்வை ஒருங் கிணைத்தார். திராவிடர் கழகப் பொரு ளாளர் வீ.குமரேசன் அவர்கள், பகுத்தறி வாளர் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, கருத்தரங்க நிகழ்ச்சிகள் நடத்துதல், இயக்க இதழ்கள் சந்தா சேர்த்தல், உலக புத்தக தினத்தையொட்டி தலைமைக் கழகம் அறி வித்துள்ள இயக்க வெளியீடுகள் (50% தள்ளுபடி) பரப்புதல் மற்றும் தொடர்ந்த கழக செயல்பாடுகளை வலியுறுத்தி சிறப் புரையாற்றினார். பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு அவர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களின் பணிகளைப் பாராட்டி, ஊரடங்கு காலத் தில் இயக்க நூல்களைப் படித்து குறிப் பெடுத்தல், படித்ததில் பிடித்ததை எழுதுதல் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது வழிகாட்டுதல்படி செயல்பட வலியுறுத்தி உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர் அண்ணா.சரவணன் "சிங்கப்பூரில் தமிழர் தலைவர்" நூல் குறித்து கருத்துரை வழங்கினார். மாநில துணைத்தலைவர்கள் அ.தா.சண்முக சுந்தரம், மேகநாதன், ச.குருசாமி (கேடிசி), தேனி மாவட்ட அமைப்பாளர் அன்புக் கரசன், பழனி மாவட்டத் தலைவர் திராவிடச் செல்வன், திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் காஞ்சித்துரை, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மன்னர் மன்னன், மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன், செயலாளர் செங்கதிர், விருதுநகர் மாவட் டத் தலைவர் பெ.த.சண்முகசுந்தரம், செயலாளர் சு.பாண்டி, அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் பூ.பத்மநாதன், இராசை முத்துகணேசு ஆகியோர் நிகழ்வில் பங் கேற்று கருத்துரை வழங்கினர். நிறைவாக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச் செல்வன் ஆகியோர் பங்கேற்ற பொறுப்பாளர்களுக்கு பாராட்டும், நன்றி யும் தெரிவித்து வழிகாட்டுதல் உரையாற் றினர். தமிழர் தலைவர் பகுத்தறிவாளர் கழகப்புரவலர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதல்படி பகுத்தறிவாளர் கழகச் செயல்பாடுகளைத் தீவீரப்படுத்துவதென பொறுப்பாளர்கள் உறுதி ஏற்றனர்.
No comments:
Post a Comment