கோவை, மே 8 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கரோனா ஊரடங் கால் பாதிக்கப்பட்ட கழகத் தோழர்களுக்கு உதவிகள் கோவை மாவட்டக் கழகம் சார்பில் வழங்கப்பட்டன. கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகக் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக அத்தியா வசியமான உணவுப்பொருள்கள் வழங்கிய மனித நேயப் பணி 26.4.2020 அன்று நடைபெற்றது. அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டு இருக்கும் 28 மேற்பட்ட கழகக் குடும்பங்களுக்கு மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில். மண்டல செயலாளர் ச.சிற்றரசு, மாவட்ட செயலாளர் தி க செந்தில் நாதன், மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி, மகளிரணி தோழியர் திலகமணி, வ.ராஜேஸ்வரி (சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர்), மாநில மாணவர் கழகப் பொறுப்பாளர் இராசி.பிரபாகரன் மற்றும் மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆ.பிரபாகரன். தோழர் தமிழ்முரசு, தெற்கு பகுதி செயலாளர், தோழர் புண்ணியமூர்த்தி, தமிழ் நியூட்டன், தி ச யாழினி, தி.ச.கார்முகிலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகளிரணித் தோழர் திருப்பூர் ஆர்.கல்பனா 280 கிலோ அரிசி, மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் 28 குடும்பங்களுக்குத் தேவையான பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள், பொள்ளாச்சி கழகத் தோழர் மாரிமுத்து 28 குடும்பங்களுக்கு சமையல் எண்ணெய், நிவாரண நிதியுதவியாக இ.கண்ணன் 5000 ரூபாய், தோழியர் மங்கையர்க்கரசி 1000 ரூபாய், வசந்தம் இராமச்சந்திரன் 500 ரூபாய் வழங்கினார்கள். மகிழ்ச்சி யுடன் பொருள்களைப் பெற்றுக் கொண்ட கழகக் குடும்பத்தினர்கள் மாவட்டக் கழகத்திற்கு நன்றி யையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment