அன்னையர் தினத்தில், அன்னையர்களுக்குப் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 10, 2020

அன்னையர் தினத்தில், அன்னையர்களுக்குப் பாராட்டு

சென்னை, மே 10  தாய்மையைக் கொண்டாடுவதற்கும் மற் றும் அன்னையரால் செய்யப் படும் தன்னலமற்ற முயற்சிகள் அனைத்தையும் அங்கீகரித்து பாராட்டவும், இந்திய சமூக ஊடக செயல்தளமான ஷேர் சாட், அய்ந்துநாட்கள் நடை பெறுகின்ற #MAA4ME  செயல் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 


மே 10 ஆம் தேதியன்று கடைப்பிடிக்கத் திட்டமிடப் பட்டிருக்கும் அன்னையர் தினத்தை கொண்டாடுவதற் காக இச்செயல் தளத்தில் 15 மொழிகளில் மேற்கொள்ளப் பட இச்செயல்திட்டம் வடிவ மைக்கப்பட்டிருக்கிறது. 


தங்களது தாய் மொழியில், தங்களது அம் மாக்களுக்காக அன்பையும், பாராட்டையும் பொழிய வகை செய்கின்ற, அவர்களது நெஞ்சங்களுக்கு மிக நெருக்க மான இந்த சிறப்பான செயல் திட்டத்தில் ஆர்வத்தோடு ஷேர்சாட் பயனாளிகள் பங் கேற்பார்கள்  என்கிறார் ஷேர் சாட்டின் தலைமை இயக்க அலுவலர் ஃபரீத் அக்ஷான்.


No comments:

Post a Comment