ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, மே10, காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று காணொலி மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பெருந்தொற்று நோயான கரோ னாவை கட்டுப்படுத்துவற்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். கரோனாவை எதிர்த்துப் போராட பிரதமர் அலுவலகத்தில் இருந்து எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமே போதாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மாநிலங்களுக்குப் போதிய அதி காரங்கள் அளிக்கப்பட வேண்டும். மாநில முதல்அமைச்சர்கள் மீது பிரத மரும், மாவட்ட ஆடசியர்கள் மீது முதல் அமைச்சர்களும் நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும். இல் லையேல் கரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்திவிடும். பிரதமர் அலுவலகத் தில் இருந்து மட்டும் நடவடிக்கை எடுத்தால் வெற்றி பெறாது.
வருகிற 17ஆம் தேதிக்கு பிறகு ஊர டங்கை விலக்கிக்கொள்ள அல்லது நீட்டிக்க எந்த அளவுகோல் பயன்படுத் தப்படும் என்பதை மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். கரோனா பரவலின் உச்சகட்டம் எப்போது வேண்டுமானா லும் இருக்கலாம். அதற்கு அரசு எப் போதும் தயாராக இருக்க வேண் டும்.
பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி உதவித் திட் டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் வேலை வாய்ப்புகளைப் பாதுகாக்க முடியும்.
ஊரடங்கால் மக்கள் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யாமல் ஊரடங்கை நீட்டிக்க முடியாது.
வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவது மனிதாபிமானமற்ற செயல் ஆகும். இந்த விஷயத்தில் தெளிவான திட் டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். ஏழைகளின் கையில் பணம் இருக்க வேண்டும். மத்திய அரசு, வெளிமாநிலத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கு களில் நேரடியாக தலா ரூ.7,500 செலுத்த வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
No comments:
Post a Comment