கழக வெளியீடுகளைப் படித்து சமூக வலைத்தளங்களில் கழகக் கருத்துகளைப் பதிவிடுங்கள்
இளைஞர்களுக்கு கழகத் துணைத் தலைவர் அழைப்பு
ஈரோடு, மே.10, ஈரோடு மண்டல கழகக் கலந்துறவாடல் கூட்டம் காணொலி மூலமாக 24.4.2020 காலை 11 மணிக்கு நடைபெற்றது, கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் அனைவரையும் வரவேற்று கூட்டத்தினைத் துவக்கி வைத்தார்.
தஞ்சை.இரா.ஜெயக்குமார்
கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் "விடுதலை"யைத் தோழர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும், தோழர்களின் முகவரிப் பட்டியல், தோழமைக் கட்சி முக்கியமானவர்களின் முகவரி, கைப்பேசி எண் பெற்று வைத்திருக்க வேண்டும்' கழகக் குடும்பத் தோழர்கள் உடல் நலத்தைப் பேண வேண்டும், ஒவ்வொரு தோழர்களும் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் அவர்களின் 21 அம்ச திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கழகத் தோழர்களின் குடும்ப நலன் மற்றும் கரோனா பாதிப்பு விழிப்புணர்வு பற்றியும் தோழர்கள் ஆசிரியர் அவர்கள் மற்றும் அரசும் வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி வீட்டில் தனித்திருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் உலக புத்தக தினத்தை முன்னிட்டு இயக்க நூல்களை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள மாபெரும் கழிவு விலையில் பெற இன்றே தலைமைக் கழகத் தொடர்பு எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டுமென கூறி மாவட்டத் தலைவர்கள் அதனை உறுதிப் படுத்துமாறு கூறினார்.
கவிஞர் கலி.பூங்குன்றன்
கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், கழகத் தோழர்கள் கரோனாத் தொற்று நோய்க் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களின் குடும்ப நலன்களையும், இணைப்பில் வர இயலாத தோழர்களின் குடும்ப நலன்களையும் பொறுப்பாளர்களின் மூலமாக கேட்டறிந்தார். ஒவ்வொருவரும் நமது தோழர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவர்களின் நலன்களை அறிந்து கொண்டு தேவைப்பட்டால் முடிந்த உதவிகளை செய்யக் கூறி இந்த ஊரடங்கை நமக்குக் கிடைத்த ஓய்வாகக் கருதாமல் இயக்க நூல்களைப் படிப்பதுடன் நில்லாமல் நினைவில் கொள்ள உடனுக்குடன் குறிப்பு எழுதி வைத்துக் கொள்வதால் பயனுள்ளதாக அமையும். தந்தை பெரியாரின் கொள்கைகள் மனிதநேய அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டது, அவரது தொலைநோக்குச் சிந்தனைகள், அவர் மறைந்து 45 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் பேசப்படும் வாழ்வியல் நெறியாக அவரது தத்துவங்கள் நீடிக்கின்றன. அதனை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் பணியை நம் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் சிறப்பாகச் செய்து வருகிறார், இன்று வடமாநிலங்களில் நடைபெறும் சமூக நீதிப்போராட்டங்கள், மத, ஜாதி ரீதியான கொடுமைக்கெதிரான போராட்டங்களில் அண்ணல் அம்பேத்கர் படங்களை மட்டுமின்றி தந்தை பெரியார் படங்களை ஏந்தி மக்கள் போராடுகின்றனர் என்றால், நாளை தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் இந்தியா முழுவதும் தேவைப்படும் என்பதை அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அன்றே டில்லியில் பெரியார் மேளா நடத்தியதன் விளைவாக ஏற்பட்ட தாக்கமே எனவும், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் தந்தைபெரியார் தேவைப்படுகிறார் என்பதை, தான் சில மாதங்களுக்கு முன்பு கலந்து கொண்ட வெளிநாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றி கூறினார். மேலும், ஆசிரியர் அவர்கள் இந்தக் காலக்கட்டத்திலும் இயக்கப் பணிகள் மற்றும் சமுதாயப் பணிகளைத் தொய்வின்றி வீட்டிலிருந்தே செய்து நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார். இளைஞரணித் தோழர்கள் சிறிய சிறியப் புத்தகங்களைப் படித்துக் கழகக் கருத்துகளை சமூகவலைதளங்கள் வழியாகப் பரப்பிட வேண்டும். விடுதலையை சமூக வலை தளம் வழியாக தினமும் கட்டாயம் படித்து மற்ற தோழர்கள், நண்பர்களும் படிக்க அவர்களுக்கும் சமூக வலைதளம் மூலமாக அனுப்ப வேண்டும் என்றார். அண்மையில் ஆசிரியர் அவர்கள் அறிவித்த 21 அம்ச திட்டத்தினையும் விளக்கிப் பேசினார்
கலந்து கொண்டவர்கள்
அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மண்டலத் தலைவர் பிரகலாதன், ஈரோடு மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், நாமக்கல் மாவட்டத் தலைவர் அ.குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சு.சரவணன், செ.பிரகாசன், வேலூர் அசேன், மண்டல இளைஞரணிச் செயலாளர் செபராசு செல்லத்துரை, அம்மாபேட்டை மணிமாறன், பவானி அசோகன், விஜயமங்கலம் மோகன், சசிதரன், விஜி, சீனிவாசன் பள்ளிப்பாளையம், பகுத்தறிவாளர் கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் ப.இளங்கோ, ஈரோடு நகரச் செயலாளர் வீ.தேவராசு, ஈரோடு மண்டல மாணவர் கழகச் செயலாளர் வெற்றி, ஈரோடு கோ.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ஈரோடு மாநகர செயலாளர் வீ.தேவராஜ், நாமக்கல் மாவட்டத் தலைவர் குமார், மாவட்டச் செயலாளர் சரவணன், ஈரோடு கோ.திருநாவுக்கரசு, சீனிவாசன், ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை, பவானி ஒன்றியத் தலைவர் அ.அசோக் குமார், அம்மாப்பேட்டை ஒன்றியம் மணிகண்டன், குருவை மாணவர் கழகம் மணிகண்டன், பெருந்துறை ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்கள் விஜயமங்கலம் மோகன்குமார், சசிதரண், விஜய், புதிய ராஜா, கோபி, நம்பியூர் வெற்றிச்செல்வன், இளங்கோ ஆகியோர் கலந்து தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர். ஈரோடு மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன் நன்றி கூற நிறைவுற்றது. மண்டல இளைஞரணிச் செயலாளர் செபராசு செல்லத்துரை காணொலிக் கலந்துரை யாடலை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
No comments:
Post a Comment