கோவில் நுழைவுப் போராட்டத்தை தந்தை பெரியார் முதன்முதலாக அறிவித்த மன்னார்குடியில்தான் அதன் வெற்றி விழாவும் நடைபெற்றது
கழகத் துணைத் தலைவர் பெருமிதம்
மன்னார்குடி,மே 10, கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டிருக்கும் நிலையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் காணொலி வாயிலாக மன்னார்குடி கழக மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26.04.2020 அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி 8.30 மணி வரை இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.
காணொலி வாயிலாக நடைபெற்ற மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
இக்கூட்டத்திற்கு மன்னார்குடி கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையேற்று உரையாற்றினார். மாநில விவசாயத் தொழிலாளரணிச் செயலாளர் இராயபுரம் கோபால், மாவட்டச் செயலாளர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன் ஆகியோர் முன்னி லையேற்று உரையாற்றினார்.
கழகத் துணைத் தலைவர்
கவிஞர் கலி.பூங்குன்றன் உரை :
மன்னார்குடி கழக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு ஊர், தந்தைபெரியார் இந்த ஊரில்தான் முதன் முதலில் கோவில் நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை வேண்டி நடைபெற்ற நீண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதற்கு வெற்றி விழா கொண்டாடியது இதே மன்னார்குடியில்தான். இப்படி இயக்க வரலாற்றில் பல சாதனைகளை செய்வதற்கு உறுதுணையாக இருந்த பல கருஞ்சட்டை வீரர்கள் வாழ்ந்த ஊர் இந்த மன்னார்குடி என்று பழைய நினைவுகளையெல்லாம் பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்த ஊரடங்கு காலத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள், முடிந்த வரை இயலாதவர்களுக்கு உதவிடுங்கள் என்று கருத்துரை யாற்றினார்.
கழகப் பொதுச்செயலாளர்
இரா.ஜெயக்குமார் உரை :
கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் முடங்கியிருக்கும் சூழ்நிலையில், நம்மையெல்லாம்விட அய்ந்துநாட்களுக்கு முன்பாகவே தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், இன்றைய சூழ்நிலையில் இயக்கத் தோழர்கள் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது பற்றி 21 அம்சங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அரசின் நடவடிக்கைகள்குறித்து பாராட்டு அறிக்கை, ஆலோசனைகள் அடங்கிய அறிக்கைகள் தொடர்ந்து விடுதலையின் வாயிலாக எழுதி வருகிறார். ஆசிரியர் அவர்களின் விருப்பம் விடுதலை நாளேடு அதிக அளவில் மக்களிடம் சென்றடைவதுதான், அதை நிறை வேற்றும் விதமாக கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் ஏற்பாட்டில் விடுதலை நாளேடு நான்கு பக்கமாக, போக்குவரத்து இல்லாத நிலையிலும் இணையம் வழியில் PDF வடிவில் அனைவரது செல்பேசிக்கும் மதியம் 2 மணிக்கெல்லாம் வந்துவிடுகிறது. அதனை நாம் அனைவரும் நம்முடைய தொடர்பில் இருக்கும் அத்துணை நபர்களுக்கும் அனுப்பி வைத்தால் விடுதலை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை கூடும் என்பதை இந்த கூட் டத்தின் வாயிலாக அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
1942இல் தந்தை பெரியார் கூறினார் வரும் காலங்களில் கம்பியில்லா தொலைத் தொடர்பு சாதன வசதி வந்துவிடும் என்று. அதனை தற்போது நாம் பயன்படுத்தி வருகிறோம். எல்லாவற்றிலும் வழிகாட்டி நம்முடைய அய்யா ஆசிரியர் அவர்கள்தான், இன்றைக்குக் காணொலி மூலம் தோழர்களை சந்தித்துக் கூட்டம் நடத்துவதிலும் ஆசிரியர்தான் வழி காட்டியாக இருக்கிறார். ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் காணொலிமூலம் தோழர்களை சந்தித்து நலம் விசாரிப்பது, இயக்கப் பணிகள் பற்றி ஆலோசனை வழங்குவது போன்றவற்றை தனது அன்றாடப் பணிகளாகக் கொண்டுள்ள தலைவரை நாம் பெற்றுள்ளோம். தனது குடும்ப உற வினர்களைவிட கழக உறவினர்களிடம்தான் அதிகமாக அக்கறையோடு பேசக்கூடிய தலைவரை நாம் பெற்றிருக் கிறோம்.
இறைக்கு 22 ஆவது கூட்டமாக இந்த மன்னார்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது. வீட்டில் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள தோழர்களின் முகவரி பட்டியலைத் தயாரிக்க வேண்டும், அமைப்புசாராத் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு வசதி வாய்ப்பு இல்லாமல் இருக்கும் தோழர்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும், இன்றைய தினம் நம்முடைய தோழர்கள் நாடு முழுவதும் இதனை செய்து வருகிறார்கள். நாட்டில் மிகப் பெரிய அளவிற்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட இருக்கிறது, அதனால் கழகத் தோழர்கள் பொதுமக்கள் அனைவரும் சிக்கனத்தைக் கடை பிடிக்க வேண்டும் என நம்முடைய தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதனை ஏற்று நாம் கடைபிடிக்க வேண்டும். இந்தகூட்டத்தின் வாயிலாக பல்வேறு பகுதிகளில் இருக்கும் உங்களையெல்லாம் ஒன்றாக சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது 30 நாட்களாக நான் எனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் இருப்பது மனமகிழ்வாக இருக்கிறது. அதுபோல் நீங்களும் உங்கள் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்கி செலவிடுங்கள் என்று தொடக்க உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் வீரமணி, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்டத் துணைத் தலைவர் சுதந்திர மணியம், மாவட்டத் துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் இரா.வெற்றிக் குமார், மண்டல இளைஞரணிச் செயலாளர் வே.ராஜவேல், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்டத் தலைவர் கவுதமன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்டச் செயலாளர் கோபால், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட அமைப்பாளர் பூபாலதாஸ், தகைலை ஊமைத்துரை, நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் இரா.சக்திவேல், ஒன்றிய இளைஞரணித் தலைவர் போஸ், மன்னை நகரச் செயலாளர் ராமதாஸ், மன்னை சித்து, மன்னை ஒன்றியத் தலைவர் தமிழ்செல்வம், மேலவாசல் திரிசங்கு, பெட்ரன்ட் ரசல், கழகப் பேச்சாளர்கள் இராம.அன்பழகன், வழக்குரைஞர் சிங்கார வேலு, கருவாக்குறிச்சி தங்க.பிச்சைக்கண்ணு, நீடாமங்கலம் நகர செயலாளர் கி.ராஜேந்திரன், பகுத்தறிவாளர் கழக நகரத் தலைவர் கோ.அழகிரி, நகர இளைஞரணித் தலைவர் மணிகண்டன், நீடாமங்கலம் ஒன்றிய இளைஞரணித் தலைவர் க.சேகர், கோவில்வெண்ணி இரவிச்சந்திரன், இளைஞரணி இளம்பரிதி, புல்லவராயன் குடிக்காடு கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
வி.சி.வில்வம் திருச்சி திருவெறும்பூரிலிருந்து காணொலி யில் தோழர்கள் அனைவரையும் இணைத்து கலந்துரை யாடல் கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு பேருதவியாக இருந்தார்.
No comments:
Post a Comment