செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 13, 2020

செய்தித் துளிகள்....

* கரோனாவுக்கான ‘பிளாஸ்மா' மருத்துவம் சென்னை பொது மருத்துவமனையில் (எம்.எம்.சி.) தொடங்கியது.


* கரோனாவால் 5 லட்சம் முடி திருத்தும் தொழிலாளர்கள் பணிப் பாதிப்பு!


* உலகில் கரோனா தொற்றால் 154 கோடி மாணவர்களின் கல்வி பாதிப்பு - இது யுனெஸ்கோவின் அறிவிப்பு.


* ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு.


* மத்திய அரசின் இணைச் செயலாளர் தலைமையில் நால்வர் கொண்ட குழு கரோனா தொற்று ஆய்வுக்காக இன்று தமிழ்நாடு வருகை.


* ஜூன் மாதத்துக்குக் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்கிட தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு ரூ.219 கோடி.


* தேசிய அளவில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படலாம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து.


* சமூக இடைவெளியின்றி முன்னாள் இராணுவத்தினர் குவிந்ததால் கிருட்டிணகிரி இராணுவக் கேன்டீன் மூடல்.


* வேலை வாய்ப்பு இன்மையால் வறுமையின் பிடியில் 62 லட்சத்து 86 ஆயிரத்து 118 கட்டுமானத் தொழிலாளர்கள்.


* செய்தியாளர்கள் சந்திப்பின்போது சீன வம்சாவளி பத்திரிகையாளருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் சினமுற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியிலேயே வெளியேறினார்.


No comments:

Post a Comment