சென்னை, மே 16- கரோனா வைரஸ் பரிசோதனைக்காக மொபைல் சோதனை பூத்து கள் அமைப்பது சாத்திய மில்லை என்று உயர்நீதிமன் றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த வழக்குரைஞர் அமல் அந்தோணி தாக்கல் செய்த மனுவில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் பிறப் பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வீடு இல்லாத ஆயிரக்கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் தங்கியுள்ளனர். உணவுக்காக இவர்கள் கஷ்டப்படுவதுடன் உணவு கிடைக்கும் இடங்க ளுக்கு நகர்கிறார்கள். இவர் களுக்கு கரோனா பரிசோ தனை இதுவரை செய்யப்பட வில்லை. இவர்களுக்கிடையே கரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே, வீடில்லா மல் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய ஒரு குழுவை அமைக்குமாறு அர சுக்கு உத்தரவிட வேண்டும்.
தனியார் மருத்துவமனை களில் கரோனா சோதனைக்கு ரூ.4,500 கட்டணம் வசூலிக் கிறார்கள். சாதாரண மக்கள் இவ்வளவு தொகையை செலுத்த முடியாது. எனவே, ரூ.500 கட்டணம் அல்லது அதற்கு குறைவான கட்டணத் தில் கரோனா பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். உத்தரப்பிரதேசம், கேரளா, ஜார்கண்ட் மாநிலங் களில் மொபைல் பரிசோ தனை மய்யங்கள் மூலம் கரோனா பரிசோதனை நல்ல பலனை கொடுத்துள்ளது. அதேபோல், தமிழகத்திலும் அதிக எண்ணிக்கையில் மொபைல் பரிசோதனை மய்யங்களை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண் டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு இந்த மனு வுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் பதில் தருமாறு உத்தர விட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந் தது. அப்போது, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில், தமிழகத்திற்கு ஜனவரி 25 முதல் மே 6 வரை 91,985 பிசிஆர் சோதனைக் கருவிகளும், 38,038 ஆர்என் அய் சோதனைக்கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மக்களையும் பரி சோதனை செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. மொபைல் சோதனை சாத்தியமானதல்ல என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment