கரோனா நீங்கினால்தான் கல்லூரிகள் திறக்கும் உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

கரோனா நீங்கினால்தான் கல்லூரிகள் திறக்கும் உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு

சென்னை, மே 16- கரோனா வைரஸ் தொற்று இந்தியா வில் பரவியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் அனைத்துக் கல் லூரிகளும் மூடப்பட்டுள் ளன.


பருவத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்கண்ட தேர்வுகளை நடத்துவது குறித்தும், கல்லூரிகள் திறப் பது குறித்தும் பல்கலைக் கழக மானியக் குழு தனியாக கால அட்டவணை ஒன்றையும் கடந்த வாரம் வெளியிட்டது.


அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதியில் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சுட் டுரைப்பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:  தமிழகத்தில் வைரஸ் தொற்று என்றைக்கு விலகுகிறதோ அந்த சூழ்நிலை யில் கல்லூரிகளை தொடங்க வும், தேர்வுகளை நடத்துவ தற்கும் தயாராக இருக்கி றோம். அதேபோல பொறியியல் கலந்தாய்வு நடத்துவ தற்கு வசதியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


தற்போது கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு அந்த கல்லூரிகளில் முழுமையாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தபின் மாணவர் கள் எந்த அச்சமும் இல்லை என்று கருதும்பட்சத்தில் தான் கல்லூரிகளை தொடங்க முடியும். 


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment