புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 17, 2020

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுங்கள்

உ.பி முதல் அமைச்சருக்கு பிரியங்கா காந்தி கடிதம்



புதுடில்லி, மே 17 புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


ராஜஸ்தானில் தங்கி வேலை பார்த்த வெளி மாநில தொழிலாளர்கள் லாரி மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற லாரி, நேற்று அதிகாலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்றபோது மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத் துக்குள்ளானது. இதில் புலம்பெயர் தொழி லாளர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உத்தர பிரதேச அரசு உதவ வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செய லாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


 இதுதொடர்பாக, உ.பி. முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், புலம்பெயர் தொழி லாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும். நாட்டைக் கட்டமைக்கும் தொழிலாளர்கள் இப்படி சாலைகளில் நடப்பதை கண்டு மனவேதனை அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.


 


 


No comments:

Post a Comment