தோழர் கே.வரதராஜனுக்கு வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 17, 2020

தோழர் கே.வரதராஜனுக்கு வீர வணக்கம்!


இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - சி.பி.எம்.) இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான தோழர்  கே.வரதராஜன் (வயது 73) அவர்கள் நேற்று (16.5.2020) கரூரில் காலமானார் என்பதை அறிய மிகவும் துயரமடைகிறோம்.


சிறந்த கொள்கைவாதி. திருச்சி சிறீரங்கத்தைச் சேர்ந்தவர். பல ஆண்டுகள் டில்லியில் சி.பி.எம். தலைமையகத்திலும் பொறுப்பில் இருந்தவர்.


தந்தை பெரியார் அவர்களிடத்திலும், திராவிடர் கழகத்தின் கொள்கைகளிலும் மிகுந்த ஈர்ப்பு உள்ள, சிறந்த பொதுநலப் போராளி அவர்.


மேடைகளில் பேசும்போது எந்தப் பொருள் பற்றியும் துல்லியமாய் விளக்கும் ஆற்றலாளர். விவசாயிகளின் பொறுப்பாளராக கட்சியில் பல ஆண்டுகள் தொண்டு புரிந்த தோழர்.


(கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கட்சியில் மூன்று வரதராஜன்கள் உண்டு. முன்பு தமிழகச் செயலாளராக இருந்த தோழர் திண்டுக்கல் என். வரதராஜன், வில்லிவாக்கம்  டபிள்யூ.ஆர்.வரதராஜன். இப்போது மறைந்துள்ள தோழர் சிறீரங்கம் கே.வரதராஜன்).


அவரது மறைவு, தமிழக பொதுவாழ்வுக்கு ஒரு பெரும் இழப்பு ஆகும். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், கட்சியினர் ஆகி யோருக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவருக்கு நமது வீரவணக்கம்!


 - கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


17.5.2020


No comments:

Post a Comment