குடியாத்தம் திராவிடர் கழகம் சார்பில் தொடரும் மனிதநேய உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 8, 2020

குடியாத்தம் திராவிடர் கழகம் சார்பில் தொடரும் மனிதநேய உதவிகள்


குடியாத்தம், மே 8 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத் தலுக்கிணங்க கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடி யாத்தம் பகுதியில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குடியாத்தத்தில் 5.5.2020 திங்கள் மாலை மாலை 4 மணியளவில் குடியாத்தம் புவனேசுவரிப் பேட்டை பெரியார் அரங்கில் நிவாரண உதவி களைக் கழகத் தோழர்கள் வழங் கினார்கள். மாற்று திறனாளிகளைக் கொண்ட 80 குடும்பத்தினருக்கு அரிசி வழங்கப்பட்டது


தோழர்கள் லட்சுமி குடியாத்தம், முகிலரசு சென்னை, கங்காதரன் பெங்களூரு ஆகியோர் இந்த நலத்திட்ட உதவிக்கு தங்கள் பங்களிப்பை அளித்தனர். தோழர்கள் வழங்கிய பணத்தில் ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி வீதம் 80 மாற்றுத் திறனாளிகள் சார்ந்த குடும்பங்களுக்கு குடியாத்தம் பெரியார் அரங்கில் வழங்கப்பட்டது நான்காவது முறையாக மீண்டும் தொடரும் நண்பர்கள் உதவியோடு என ஊக்கத்துடன் தோழர்கள் தெரிவித்தனர். மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி, பகுத்தறிவாளர் கழக வேலூர் மாவட்டத் தலைவர் அன்பரசன், வேலூர் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் லதா, வேலூர் மாவட்டத் தலைவர் சிவக்குமார், மகளிர் பாசறை உஷாநந்தினி, விடுதலை வாசகர் வட்ட தலைவர் இரவிக்குமார், குடி யாத்தம் நகர திராவிடர் கழக தலைவர் சாந்தகுமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஒருங்கிணைப்பில் நிவாரண மனித நேய உதவிகள் வழங்கப்பட்டன.


No comments:

Post a Comment