கருநாடக மாநில கலந்துறவாடல் கூட்டம் கழகத் துணைத் தலைவர் பங்கேற்று கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 17, 2020

கருநாடக மாநில கலந்துறவாடல் கூட்டம் கழகத் துணைத் தலைவர் பங்கேற்று கருத்துரை


பெங்களூரு, மே  17- கருநாடக மாநில திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் 30.4.2020அன்று மாலை நான்கு மணிக்கு காணொலி வழியாக சிறப்பாக நடை பெற்றது. அனைவரையும் கரு நாடக மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ வரவேற்று உரையாற்றினார். உலகப்புத்தக நாளை முன் னிட்டு தமிழர் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கையினை ஏற்று 12,000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கிட பதிவு செய் துள்ள தகவலையும் தெரிவித் தார்.


நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் பங்கேற்று, சுயமரியாதைச்சுடரொளி சொர்ணாஅரங்கநாதன் அவர்களுக்கு வீரவணக் கத்தை தெரிவித்துக்கொண் டார். அனைத்துத் தோழர் களும் குடும்பத்துடன் நலம் காணவேண்டுமென கேட்டுக் கொண்டார்.நெருக்கடியான இக்காலகட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கையினையும், விடுதலையில் வெளிவரும் செய்திகளையும் இணையத் தின் வழியாக படிக்க வேண் டும் என்றும், கழகப் புத்தகங் களைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியும் , ,அறிவாசான் தந்தைபெரியார் சிந்தனைகள் இன்று நடை முறைக்கு வந்துவிட்டதை எடுத்துரைத்து முப்பது நிமி டம் கருத்துரை வழங்கினார். நிறைவாக பேசிய கழகப் பொதுச்செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன்  உரையில், அறிவாசான் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆகியோரின் தொண் டால் விளைந்த பயன்களை யும், கருஞ்சட்டைவீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் விளக்கி உரையாற்றினார்.  நிகழ்ச்சியில்  வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.ஜெயராமன், பெரி யார் பெருந்தொண்டர்கள் வீ.மு.வேலு, முத்துச்செழியன், மாநில துணைத்தலைவர் தங் கம் இராமச்சந்திரா, பொதுக் குழு உறுப்பினர் இரா.இரா சாராம், சே.குணவேந்தன், கஜபதி, அமுதபாண்டியன், ஆனந்தராஜ், கோ.சண்முகம், வழக்குரைஞர்கள் ஜெ. அருண், பெஞ்சமின்பிராங் களின், வே.நடவரசன், சு.ஒளி வண்ணன், மு.கருணாநிதி, சென்னை சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் இரா.தே.வீரபத்திரன், ஓசூர் மாவட்டத்தலைவர் சு.வன வேந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் நிகழ்ச்சியை நெறிப்படுத் தினார்.


No comments:

Post a Comment