தமிழர் தலைவரின் ஓய்வறியா உழைப்பால் இயக்கம் வெற்றி கண்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 17, 2020

தமிழர் தலைவரின் ஓய்வறியா உழைப்பால் இயக்கம் வெற்றி கண்டது

காணொலிமூலம் நடத்தப்பட்ட தருமபுரி கலந்துறவாடலில் கழகத் துணைத் தலைவர் பெருமிதம்



தருமபுரி, மே 17- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 28.4.2020 அன்றுமாலை அய்ந்து மணிக்கு, காணொலி வழியாக சிறப்பாக நடைபெற் றது. அனைவரையும் மாவட் டத் தலைவர் வீ.சிவாஜி வரவேற்று உரையாற்றினார்.


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பங்கேற்று, அறிவா சான் தந்தைபெரியார் உழைப் பால் பெற்ற பயன்களையும், கடவுள், மத, சாஸ்திர சம் பிரதாயங்களில் மூழ்கிக் கிடந்த மக்களிடம் பகுத்தறிவு ஒளிபாய்ச்சியதால் தன்மான உணர்வுபெற்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கும் சிறப் பினையும், அன்னை மணியம் மையாரின் தன்னலம் பாராத தொண்டினையும், தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்க ளிடம் வேலை வாங்கி வெற்றிகண்ட வரலாறு, எதிர்த்துப் பேசி யோரையும் பாராட்டச் செய்த பாங்கு ஆகியவற்றை விளக்கி 45 நிமி டம் கருத்து ரையாற்றினார்.


நிகழ்ச்சியில், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் த.யாழ்திலீபன், மண்டலத் தலைவர் அ.தமிழ்ச் செல்வன், மண்டல மாணவர் கழகச் செயலாளர் செல்லத் துரை, மாவட்டத் துணைத் தலைவர் க.கதிர், மாவட்டத் துணைச்செயலாளர் சேட்டு, மாடர்ன் ரேசனலிஸ்ட் வாச கர் வட்ட மாவட்ட துணைத் தலைவர் மருத்துவர் முனி ராசு, துணைச்செயலாளர் ஆர்.கே.கண்ணன், நகரத் தலைவர் கரு.பாலன், நகரச் செயலாளர் எல்.அய்.சி. பரமசிவம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் மாரி.கருணாநிதி, பகுத்தறி வாளர் கழக மாவட்ட அமைப்பாளர் கதிர்.செந்தில், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் இர. கிருட்டிணமூர்த்தி, ஒன்றியத் தலைவர் ச.துரைசாமி, ஒன்றி யச் செயலாளர் ஆர்.சென் றாயன், மேனாள் மாவட்டத் தலைவர் மா.கிருட்டிணன், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் மா.சுதா, இரா.பரிமளம், மாவட்ட இளைஞ ரணித் தலைவர் தீ.ஏங்கல்ஸ், க.நடராசன், மாணவர் கழகத் தோழர்கள் சிறீதர், முனியப் பன், எழுத்தாளர் சி.மு.அறி வழகன் உள்ளிட்டோர் கலந் துரையாடினார்கள்.


நிறைவாக மாவட்ட மகளிரணித் தலைவர் நளினி கதிர் நன்றி கூறினார்


நிகழ்வினை மாநில மாண வர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன் நெறிப்படுத்தினார்.


புத்தக முன்பதிவு


தருமபுரி மாவட்ட  காணொலி கலந்துரையாட லில், உலகப் புத்தக நாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கையினை ஏற்று ரூபாய் 1,500/க்கு அடங்கிய புத்தகத் தொகுப் பினைப் பதிவு செய்தவர்கள்- ஊமை.செயராமன்-3, தகடூர் தமிழ்ச்செல்வி-2, வி.சிவாஜி-3, மருத்துவர் முனிராசு-2, ஆர். கே.கண்ணன்-1, மாரி.கருணா நிதி-2, இர.கிருட்டிணமூர்த்தி -2, அ.தமிழ்ச்செல்வம்-1, ச. துரைசாமி-1, ஆர்.சென்றா யன்-1, மா.சுதா-1, கதிர்நளினி-1, கதிர்செந்தில்-1, இளைய மாதன்-1, கடமடை தீர்த்தகிரி-1, புலவர் வேட்ராயன்-1, கே.ஆர். குமார்-1, ரூபாய் 1,000/க்குரிய புத்தகத் தொகுப்பினைப் பதிவு செய்தோர் இரா.பரி மளம், சேட்டு.ரூபாய்.500க்கு ரிய புத்தகத் தொகுப்பிற்கு கரு.பாலன், தீ.ஏங்கல்ஸ், செல்லதுரை, முனியப்பன் ஆகியோர் புத்தக முன்பதிவு செய்து கொண்டனர்.


No comments:

Post a Comment