வெறுப்பை விதைத்த வெதுப்பகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

வெறுப்பை விதைத்த வெதுப்பகம்


சென்னை தியாகராய நகரில்  இயங்கிவரும் ஜெயின் அடுக்ககம், தின்பண்டங்கள் கடையின் விளம்பரத்தில், "இந்தக் கடையில் முஸ்லிம்கள் வேலை செய்யவில்லை மற்றும் சுத்தமான சைவம்" என்ற வாசகங்களுடன் கடந்த வாரம் விளம்பரம் வெளியிடப்பட்டது. இது சமூக ஊடகங்களில் கடும் விவாதத்தைக் கிளப்பியது.


இது தொடர்பாகப் பேசிய இந்தக் கடையின் உரிமையாளர், சவுகார்பேட்டையில் இருக்கக்கூடிய ஜெயின் சமூக மக்கள், பேக்கரி பொருட்களை  இஸ்லாமியர்கள் கடையில் வாங்க மாட்டார்கள் என்பதால், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட 'வாட்ஸ்அப்' விளம்பரம் என்று கூறியுள்ளார்.


சட்டத்திற்குப் புறம்பாக, ஒரு மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு வெறுப்பினை உண்டாக்கும் வகையிலும், இழிவு செய்யும் வகையிலும் உள்ள இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும், தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதனிடையில் பத்திரிகைகளும் இச் செய்தியில் கவனம் கொண்டதால் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள் கடைக்காரர்கள்.


தொடர்ந்து பல்வேறு வழிகளிலும் இஸ்லாமிய மத சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பிரச்சாரம் வடமாநிலத்தவரால் கட்டவிழ்த்துவிடப்படுவது மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது.


- தமிழ் கா.அமுதரசன்


No comments:

Post a Comment