பெரியார் கேட்கும் கேள்வி! (13) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (13)

சம்பாதிப்பதே முடிந்த முடிவா?



கக்கூஸ் எடுக்கும் தோழனுக்கு மல நாற்றமும் மல அசூயையும் நமக்குள்ளது போல் எப்படி இருப்பதில்லையோ அதுபோல் பணத்திலும் பெருமையிலும் மாத்திரமே முக்கிய ஆசை கொண்ட பெரியோர்களுக்கு எவ்வளவு அறிவு ஆற்றல் இருந்தாலும் அவர்களுக்கு உள்ள அவர்கள் அனு பவித்துவரும் இழிவும் தாழ்வும் தோன்றாதது இயற்கையே யாகும். மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும், அவன் சந்ததி காலத்திலும் மாறும். ஆகவே அதை சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம். யோக்கியமும் அறிவும் உள்ள அரசியல் ஏற்படுமானால் பெரிய உத்தியோகம், பெரும்பட்டம், ஜமீன், இராஜா, மகா ராஜா, பதவிகள் எல்லாம் பறந்துவிடும் என்பது நினைக்க முடியாத காரியமா என்று கேட்கின்றேன். அப்படி இருந்தும் அதற்கே பாடுபடுகிறவர்கள், அதிலேயே கவலை உள்ளவர்கள், அதற்கு ஆகவே எந்தக் கட்சியிலும் சேருபவர்கள், அதற்கு ஆகவே ஒரு கட்சியிலும் யோக்கியமாய் நடந்து கொள்ளாதவர்கள் இருந்து போகட்டும். அப்படிப்பட்டவர்கள் அவர்களில் ஆற்றலுள்ளவர்கள் எத்தனைபேர் இருக்க முடியும்? விரல் மடக்க ஆரம்பித்தால் எல்லா விரல்களையும் மடக்க முடியும் என்றா கருதுகிறீர்கள்?


இவர்கள் மீது பழியைப் போட்டு விட்டு “இழிவை ஒழிப்ப தற்கு ஆகவே பிறந்தோம்“ என்று சொல்லிக் கொள்ளுகிற வர்கள் தப்பித்துக் கொள்ள முடியுமா? “பணம், பதவி, புகழ், பெருமை விரும்பாத பொதுநலத் தொண்டன்” என்று பீத்திக் கொள்ளுகிறவர்கள் சும்மா இருக்க முடியுமா? என்று கேட்கி றேன்.


('விடுதலை', 28.4.1943)


- ‘மணியோசை’


No comments:

Post a Comment