காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழகக் கலந்துறவாடல் கூட்டம்


காஞ்சிபுரம், ஜூன் 13- காஞ்சிபுரம் மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 10.6.2020 அன்று மாலை 6.30 மணிக்கு காணொலி வழியாக நடைபெற்றது.


இராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் சொ. சீவன்தாசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.


மண்டல திராவிடர் கழகத் தலைவர் பு.எல்லப்பன் தலைமை வகித்து 86ஆம் ஆண்டு காணும் 'விடுதலை'க்கு வாழ்த்து தெரிவித்தார். பொதுக்குழு உறுப்பினர் திருத் தணி வழக்குரைஞர் மா.மணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, நாற்பது ஆண்டு களாக 'விடுதலை' படித்து வருகிறேன். 'விடுதலை' ஊட் டிய உணர்வுக் காரணமாக எனது மகனுக்கு விடுதலை என்று பெயர் சூட்டினேன். இன்று அமெரிக்காவில் பணி புரிகிறார். 'விடுதலை' ஏட்டை தடையின்றி நடத்தி வரும் நமது தமிழர் தலைவருக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று உரை நிகழ்த்தினார். முதலாவதாக கலைமாமணி முனைவர் திருத்தணி பன்னீர்செல்வம் தந்தை பெரியாரைப் பற்றி பாடலை பாடி மகிழ்வித்தார்.


No comments:

Post a Comment