மன அழுத்தத்தை போக்கும் சாதனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

மன அழுத்தத்தை போக்கும் சாதனம்

சென்னை, ஜூன் 13- மின்னணு சாதன தயாரிப்பான வயர்லெஸ் ஸ்போர்ட்ஸ் ஹெட்போனை சோனி நிறவனம் அறிமுகம் செய்துள்ளது. வீட்டிலிருந்தே வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க அதிகமான தொலைபேசி அழைப்புகளைக் கையாள வேண்டிய தேவையிருக்கும் வேலைக்கு, ஒரு தனித்த வயர்லெஸ் சோனி ஹெட்போனை   வாங்கலாம். இது 15 மணி நேர நீண்ட பேட்டரி லைஃப் கொண்டதாக இருப்பதால் நாள் முழுவதும் அழைப்புகளைக் கையாளலாம். எடை குறைவாக இருப்பதால் இந்த சாதனத்தை அணிந்திருப்பது அழுத்தம் கொடுக்காது.


தன்னலமற்ற முயற்சிகளுக்கு நிதிஉதவி


கோயம்புத்தூர், ஜூன் 13- தற்போதைய உலகளாவிய கோவிட் -19 நெருக்கடியில் உயிர்வாழ்வதற்கான ஆட்கொல்லி வைரஸிற்கு எதிரான போராட்டத்தில், முன்னிலை வகிக்கும் சமூகங்கள் மற்றும் முன்னிலை பணியாளர்களுக்கு உயிர்காக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனமான மேன்கைண்ட் ஃபார்மா ஆதரவளித்து வருகிறது. தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏழைகளுக்கு உதவிடும் வகையில், செயலாற்றிய, மதுரையில் ஒரு சிறிய முடிதிருத்தும் கடையின் உரிமையாளரான மோகன் அவர் களுக்கு, ரூ.1 லட்சம் நிதி உதவியை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.


மனிதநேயத்தின் மாண்புகளை சித்தரிக்கும் இசை


சென்னை, ஜூன் 13- மனித நேயத்தின் மாண்புகளை சித்தரிக்கும் விதமாக இந்த கரோனா தொற்றுக் காலத்தில் "நிலைகுலைந்தபோது நிமிர்ந்தெழு" என்ற சிம்பொனி இசை ஆல்பத்தை. சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர் கணேஷ் பி. குமார் உருவாக்கியுள்ளார். வரும் ஜூன் 26, 2020 அன்று இந்த ஆல்பம் பன்னாட்டு அளவில் வெளியிடப்பட உள்ளது.


 மனிதநேய முன்னேற்றத்திற்கும், சுயநலமற்ற பொது நலம் புரியும் சேவை மனப்பான்மைக்கும் இலக்கியமாகத் திகழும் இந்த இசை ஆல்பத்திற்கு தமிழ் மொழி முதன்மை ஆலோசகர்  வீ. முத்துக்குமரகுருசாமி மற்றும் ஆங்கிலப் பாடலாசிரியையும் மொழி பெயர்ப்பாளரு மான  ஜார்ஜினா மார்கரைட் எஸ்ரா ஆகியோர் கொண்ட சிறப்பு அறிஞர் குழுவே உறுதுணையாக இருந்து இந்த ஆல்பம் தயாரிக்க உதவியது என அமெரிக்காவின் நவோனா ரெகார்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment