வேலூர், ஜூன் 13- வேலூர் மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 9.6.2020 அன்று மாலை 6.30 மணிக்கு காணொலி வழியாக நடைபெற்றது. மண்டல திரா விடர் கழக செயலாளர் வேட் டவலம் பி.பட்டாபிராமன் வரவேற்று உரையாற்றினார்.
மண்டல திராவிடர் கழ கத் தலைவர் வி.சடகோபன் தலைமை வகித்து உரையாற்றி னார். பெரியார் மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் பழ.செகன்பாபு தமது தொடக்கவுரையில், விடுத லையின் சிறப்புகளையும், ஏடு நடத்தும் பலர் கரோனா காலத்தில் நடத்த இயலாமல், ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி வருகிற நிலை யில், தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் எவ்வித இழப் பையும் தாங்கிக் கொண்டு 'விடுதலை' நடத்தி வருகிறார். ஆயிரம் பேருக்கு 'விடுதலை' அனுப்புகிறேன் என மகிழ் வுடன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் 'விடு தலை' வீரனின் வெற்றிகள்‘ என்ற தலைப்பில் 'விடுதலை' சந்தித்த தடைகள், 'விடு தலை'யால் தமிழர்கள் பெற்ற கல்வி, வேலைவாய்ப்பு உரி மைகள், ஒவ்வொரு கால கட்டத்திலும் நவீனமாக 'விடு தலை'யை மாற்றி அமைத்து சாதனை படைக்கும் தமிழர் தலைவரின் தொண்டினை விளக்கி ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.இ.சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கலைமாமணி பழனியப்பன், குடியாத்தம் கவிஞர் ம.ஜ.சந் தீப், வேலூர் மாநகர தலைவர் ந.சந்திரசேகரன், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி, செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் தி. காமராசு, செய்யாறு மாவட்ட ப.க. தலைவர் வடமணப்பாக் கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு மாவட்ட இளைஞரணி தலை வர் சீனிவாசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீர மணி, வேலூர் மாவட்ட ப.க. தலைவர் அன்பரசன், வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் ஈசுவரி, குடியாத்தம் நகர மகளிரணி தலைவர் லதா, மாவட்ட மாணவர் கழக தலை வர் சங்கநிதி, வேலூர் தயா ளன், இராணிப்பேட்டை தி.க. சின்னத்துரை, பொன்னேரி செல்வி, சே.மெ.மதிவதனி, திருவெறும்பூர் பெல்.ஆறு முகம், ஆவடி விஜய், விமல், சிதம்பரம் ஆறு.கலைச்செல் வன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் நெறிப்படுத்தினார்.
No comments:
Post a Comment