இந்தியாவில் மத சுதந்திரம் பாதிப்பு அமெரிக்க பிரதிநிதி கடும் கவலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

இந்தியாவில் மத சுதந்திரம் பாதிப்பு அமெரிக்க பிரதிநிதி கடும் கவலை

வாசிங்டன், ஜூன் 13- சகிப்புத் தன்மை மற்றும் அனைத்து மதத்தினரையும் மதிக்கும் வர லாறு உடைய இந்தியாவில், சமீபகாலமாக மத சுதந்திரத் துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவலை அளிப்பதாக, அமெ ரிக்காவைச் சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டுக்கான சர் வதேச மத சுதந்திரம் தொடர் பான ஆண்டு அறிக்கையை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, கடந்த 10.6.2020 அன்று வெளி யிட்டார். இதில், பல்வேறு நாடுகளில் மத சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.


இது குறித்து, சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமைப்பின் அமெரிக்க பிரதிநிதி சாமுவேல் புரவுன்பேக் கூறியதாவது:


உலகின் பல்வேறு நாடு களில் மத சுதந்திரம் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக, சமீபகாலமாக இந்தியாவில் மதக் கலவரங் கள் அதிகம் நடக்கின்றன. இந்தியா, சகிப்புத்தன்மை உடைய நாடு. அனைத்து மதங்களுக்கும் சமமான மதிப் பளிக்கும் நாடு. ஆனால், தற் போது அங்கு நடக்கும் சம் பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. இந்த பிரச்சினை களை சரி செய்வதற்கு, இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். கரோனா பிரச்சினைக்கு, சிறுபான்மையினரின் மத நம்பிக்கை மீது பழி சுமத்தக் கூடாது. பேரிடர் காலத்தில், சிறுபான்மையினருக்கு தேவையான உணவு, சுகா தாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அளிக்க வேண் டும். இவ்வாறு, அவர் கூறி னார்.


No comments:

Post a Comment