டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- கரோனா காரணமாக உலக நாடுகளில் வறுமையால் வாடும் மக்கள் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டும் என்றும், இதில் கிழக்கு ஆசிய நாடுகளில் 20 கோடிக்கு மேல் அதிகம் பாதிக்கப்படுவர் என லண்டன் கிங் கல்லூரி மற்றும் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளராக ஜே.ராதா கிருஷ்ணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது செயலாளராக உள்ள பீலா ராஜேஷ், வணிக வரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
- கரோனா ஊர் அடங்கை மேலும் நீட்டிக்கும் எண்ணம் எதுவும் அரசிடம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- அமெரிக்காவில் கரோனா காரணமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள சூழலில், வெளிநாட்டில் இருந்து பணிக்கு வர வழங்கப்படும் எச்1.பி. விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திட டிரம்ப் அரசு முடிவெடுத்துள்ளது.
தி இந்து, டில்லி பதிப்பு:
- இந்தியாவிலும், அமெரிக்காவிலும், நமது பண்டைய மரபுசார் கூறுகளான சகிப்புத் தன்மை மறைந்து வருகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க மேனாள் தூதர் நிக்கோலஸ் பர்ன்ஸ் அவர்களுடன் நடத்திய உரையாடலின் போது கூறியுள்ளார். கரோனா தடுப்பு மருந்தினைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் தவறிவிட்டன என நிக்கோலஸ் தெரிவித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- இட ஒதுக்கீடு தொடர்பான ஆணைகளை, அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதன் மூலம், நீதிமன்ற சீராய்வினை தடுக்கலாம் என லோக் ஜன்சக்தியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.
- மோடி அரசும் பா.ஜ.க.வும், இடஒதுக்கீடு கொள்கையில் உறுதியாக உள்ளது என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளவாறு ஆங்கிலத்தில் எழுதுவது குறித்த தமிழக அரசின் ஆணை பற்றிய தலையங்க செய்தியில், தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தமிழ் மொழி, பண்பாடு என்பதில் தொடர்ந்து உறுதியாக உள்ளது. அதன் ஒரு நீட்சிதான் இந்த அரசின் முடிவு என கூறப்பட்டுள்ளது.
- நீதிமன்றம் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண் டும்; வழக்குரைஞர்கள் சங்கத்தை குறை கூறுவதில் பயனில்லை; நீதியின் சமசீரற்ற தன்மை, மக்களிடையே அமைதியின்மையை ஏற் படுத்தியுள்ளது என காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரு மான கபில் சிபல், வழக்குரைஞர்கள் சங்கத்தைக் குறை கூறாதீர் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா,
13.6.2020
No comments:
Post a Comment