கோவிலைத் திறந்த அன்றே பார்ப்பன அர்ச்சகருக்கு கரோனா
திருப்பதி, ஜூன் 13 கரோனா ஊரடங்கை யொட்டி காளஹஸ்தி சிவன் கோவி லில் கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வு காரணமாக 8-ஆம் தேதிமுதல் சோதனை முறையில், கோவில் அதி காரிகள், ஊழியர்கள் மற்றும் அர்ச் சகர்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் கோவிலில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 71 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று மாலை வெளியானது.
இதில் கோவில் அர்ச்சகர் ஒரு வருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் 12-ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க இருந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத் ததாக நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியிலும் 8-ஆம் தேதிமுதல் கோவில் வழிபாட்டுக்காக திறக்கப் பட்டது. தொடக்கத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் 12.6.2020 முதல் அனைத்து பக்தர்களும் பொது தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பக்தர்கள் கூட்டம் வழி பாட்டுச் சீட்டுக்கள் வாங்குவதற்கு அதிகம்கூட ஆரம்பித்தனர். ஆரம்பத் தில் சிலருக்கு வெப்பநிலை பார்ப்பதும், சுத்திகரிப்பான் தருவதுமாக இருந்த னர். ஆனால் கூட்டம் அதிகமாக அதிகமாக அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன. திருப்பதி அமைந் துள்ள குண்டூர் மாவட்டத்தில் 500 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. எவ்வித பாதுகாப்பு நடைமுறைகள் இன்றி கூட்டத்தைக் காரணம் காட்டி திருப்பதி கோவில் திறக்கப்படுவதால் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ் தானத்திற்குச் சொந்தமான கீழ் திருப் பதியில் இருக்கும் கோவிந்தராஜ சாமி கோவிலில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து, அந்த கோயிலின் நடை சாத் தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு ஆளாகி யுள்ள ஊழியர்கள் சென்று வந்த இடங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க தேவஸ்தான நிர்வாகம் ஏற் பாடு செய்துள்ளது. அத்துடன், கரோனா தொற்றுக்கு ஆளான தேவஸ்தான ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்ட றிந்து அவர்களுக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள ஆந்திர சுகாதார துறையினர் நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டபின், ஞாயிற்றுக்கிழமை முதல் கோவில் மீண்டும் திறப்பது தொடர்பாக, ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே காளஹஸ்தி கோவில் திறந்த உடனேயே தலைமை பார்ப்பன அர்ச்சகருக்கும், அவருடன் தொடர் பில் இருந்த கோவில் ஊழியர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் திருப்பதிகோவிலிலும் கரோனா தன் லீலைகளை காட்ட காத்திருக்கிறது.
.வெளிநாட்டினர், சமீபத்தில் வெளி நாட்டில் இருந்து இந்தியா வந்த நபர்கள் மற்றும் இந்தியாவில் தங்கி யுள்ள வெளிநாட்டினர் யாரும் திருப்பதி கோவிலுக்கு வரவேண்டாம் என்று திருப்பதி கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment