பார்ப்பனர்களுக்கு விளை நிலங்கள் சொந்தமாக இருந்தாலும், அவர்கள் விளைநிலங்களில் காலை வைப்பது கிடையாது ஏன்?
பிராமணர்கள் என்னல் லாம் செய்ய மாட்டேங்கு றாங்கன்னு நீங்க பாத்தீங் கன்னா தெரியும். பிராம ணர்கள் பனங்கிழங்கு சாப் பிட மாட்டாங்க. பிராமண வீடுகளுக்குள்ள இன்னமும் பனங்கிழங்கு போகலைங்க. பனங்கிழங்கு ருசியை ஆண்கள் வேண்டுமானால் அறிந்திருக்கலாம். பெண் கள் அறிந்திருக்க மாட்டார் கள். பூமிக்கு கீழே விளை யிறதெல்லாம் சூத்திரர் களுக்கும், பன்றிகளுக்கும் உரியது. அது மட்டுமல்ல, சங்கராந்திதான் கொண்டா டுவார்களே தவிர, அவர்கள் பொங்கல் கொண்டாட மாட் டார்கள். பொங்கல் திருவிழா விலே அவ்வளவு கிழங்கு களும் படைக்கப்படுது. கிழங்குகள் சாப்பிடாத ஜாதி அவங்க, ஏன்னா கிழங்குகள் எல்லாம் பூமிக்கு கீழே விளையுதே. சர்க்கரைவள் ளிக் கிழங்கா இருந்தாலும் சரிதான், அவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆனால், உரு ளைக்கிழங்கு சாப்பிடுவார் கள். ஏன்னா அது அதிகாரத் தோடு வந்தது. கோவில் மடப்பள்ளிகளில் இன்னும் உருளைக் கிழங்கும் போகல, வெங்காயமும் போகல.
சூத்திரர்களுக்கு உரி யதை அவர்கள் சாப்பிட மாட்டார்கள் என்பது எப்போது வந்தது?
இந்து சாம்ராஜ்யத்து டைய தொடர்ச்சியாக, விஜயநகர மன்னர்கள் வந்த போதுதான் இந்தக் கூத்தெல் லாம் நடந்தது. காபி வரு கிறது. வெள்ளைக்காரன் கொண்டு வர்றான். காபிக்கு என்ன இனிப்பு சேக்குற துன்னா, கருப்பட்டி சேர்க்க மாட்டாங்க. பிராமணர்கள் சீனிக் காப்பிய அறிமுகப் படுத்தினாங்க. கீழ்ச் ஜாதிக் காரர்கள் தொட்டு, கருப் பட்டி காய்ச்சுறாங்க. அத னால கருப்பட்டி எடுக்கமாட் டார்கள். பிராமண வீடுகள்ல கருப்பட்டி பயன்பாடு மருந் துக்குத்தான் இருக்கும். சர்க்கரைப் பயன்பாடுதான் இருக்கும். கோவில் மடப் பள்ளிகளில் இல்லாத பொருள்களை எல்லாம் நீங்களே யோசிச்சுப் பாருங்க தெரியும்.
(நூல்: ‘‘மானுட வாசிப்பு'', பேராசிரியர் தொ.பரமசிவத்தின் தெறிப்புகள்)
‘‘சிலர் பயிரிடுதலை நல்லதொழிலென்று நினைக் கிறார்கள். அந்தப் பிழைப் புப் பெரியோர்களால் நிந் திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும், மண் வெட்டியும், பூமியையும், பூமியிலுண்டான ஜெந்துக் களையும் வெட்டுகிறதல் லவா!''
(மனுதர்மம், 10 ஆம் அத்தியாயம்; 84 ஆம் சுலோகம்).
- மயிலாடன்
No comments:
Post a Comment