காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை 27ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்: அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை 27ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்: அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் உத்தரவு

சென்னை, ஜூன் 18- தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்க ளுக்கும் அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 விடுபட்ட பாடங்களுக்கான பொதுத் தேர்வு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப் பீடு செய்யப்பட இருக்கிறது. அதன்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றவேண்டும்.


மாணவர்களின் காலாண்டு, அரை யாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள், அசல் மாணவர் முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வு களுக்கான மதிப்பெண்கள் பதிவு செய் யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடு கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். காலாண்டு, அரை யாண்டு தேர்வுக்கு மாணவர்கள் வருகை புரியவில்லை எனில், அதனை தெரிவிக்க வேண்டும்.


எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு 100 மதிப்பெண்களுக்கானதாகவும், அறிவியல் பாடத்துக்கு 75 மதிப்பெண்களுக்கானதா கவும் பதிவு செய்யவேண்டும்.


பிளஸ்-1 வகுப்பில் வேதியியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு 70 மதிப்பெண் களுக்கானதாகவும், கணக்குப்பதிவியல் பாடத்துக்கு 90 மதிப்பெண்களுக்கான தாகவும் இருக்கவேண்டும்.


எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுடைய ஒவ்வொரு பாட முகப்புத்தாளுடன் கூடிய விடைத்தாள்களையும் பாடவாரியாக அடுக்கிவைத்து, அதன்மேல் சம்பந்தப்பட்ட மாணவருடைய முன்னேற்ற அறிக்கையினை இணைத்திருக்கவேண்டும். அதேபோல் தான் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுடைய வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கும் செய்யப்படவேண்டும்.


இந்த ஆவணங்களையெல்லாம் வருகிற 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான நாட்களுக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அறிவிக்கும் பள்ளியில் ஒப்படைக்கவேண்டும்.


அரசுத் தேர்வுத்துறை கேட்டு இருக்கும் ஆவணங்களில் எவையேனும் இல்லை யெனில், அதற்குரிய விளக்கத்தினை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எழுத்துப்பூர்வமாக மாவட்ட கல்வி அலுவலரிடம் தவறாமல் சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment