அய்.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தரமல்லாத உறுப்பு நாடாக இந்தியா தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

அய்.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தரமல்லாத உறுப்பு நாடாக இந்தியா தேர்வு

புதுடில்லி, ஜூன் 18- அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர மல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.  அய்.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர் களாக உள்ளன. 10 நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினர் களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்றன. 2020-21ஆம் ஆண்டுக்கான நிரந்தரமில்லாத உறுப்பினர் தேர்தலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நியூயார்க்கில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், பதிவான 192 வாக்குகளில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.


2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு இந்தியா இப்பொறுப்பில் நீடிக்கும். இந் தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, அய்க்கிய நாடுகள் அவையின் முக்கிய பொறுப்பில் இருக்கும். இந்தியா தவிர, அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளும் தங்களது பிராந்தியங்களிலிருந்து, அய்.நா. பாதுகாப்பு அவையின் நிரந்தரமில்லாத உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம், அய்.நா.பாதுகாப்பு அவையின் நிரந்தரமில்லாத உறுப்பினராக 8ஆவது முறையாக இந்தியா தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மாஸ்க் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு


மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை



புதுக்கோட்டை, ஜூன் 18- புதுக் கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மாஸ்க் அணியாத வர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். தொடர்ந்து மாஸ்க் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு அறிவுறுத்தியுள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணியாதவர் களுக்கு இன்று முதல் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும். அதிக பயணிகளை ஏற்றினால் சம்மந்தப்பட்ட அரசு, தனியார் பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்படும் என  ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


 


No comments:

Post a Comment