தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களிடயே பாகுபாட்டை உண்டாக்கி எதிர்காலத்தைப் பாழடித்துவிடும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களிடயே பாகுபாட்டை உண்டாக்கி எதிர்காலத்தைப் பாழடித்துவிடும்

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!



சென்னை,ஜூன்18- தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் அறிக்கை வருமாறு, 'தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள்.


இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, “ஸ்மார்ட் போன்” போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. இணையதள வசதிகள், “வை-ஃபை” மற்றும் “பிராட்பேண்ட்” வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை. குறிப் பாகக் கிராமங்களில் இந்த வசதிகள் கிடைப்பதே மிகவும் அரிது. அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது. கிரா மப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் - நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கும் பேராபத்தானது. இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கு அடிப்படைக் கட்டமைப்பு அரசிடமும் இல்லை -  மாணவர்களுக்கும் அத்தகைய வசதிகள் வழங்கப்படாத நிலையில், இது போன்ற ஒரு விஷப்பரீட்சையை ஏன் அரசு நடத்த விரும்புகிறது?


கல்வியின் தரம் ஒருபுறமிருக்க, இணைய வழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில் லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப் பான்மையையும் ஏற்படுத்தும். நீண்ட நேரம் அலைபேசித் திரை அல்லது மடிக் கணினித்  திரையைப் பார்ப்பதால்,  அவர் களின் கண் பார்வையில் குறைபாடுகள் நேரலாம். ஊரடங்கால் வேலையை இழந்து - வருமானத்தை இழந்து - வாழ்வா தாரத்தைப் பறிகொடுத்து, வாட்டத்தில் இருக்கும் பெற்றோருக்கு, தாங்க முடியாத நிதிச்சுமையாக இணையவழிக் கல்வி நெருக்கடியைத் தரும். சுருக்கமாக, இது மத்திய பா.ஜ.க. அரசின் “பணமதிப்பிழப்பு நடவடிக்கை பாதிப்பை” விட,  இரட்டிப்பு  பாதிப்பை எதிர்காலச் சமுதாயமான மாணவர்களுக்கு ஏற்படுத்தி விடும்.


மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை யும் பாகுபாடுகளையும் உருவாக்கி- மாண வர் சமுதாயத்திடையே பள்ளிகளில் நிலவி வரும் சமநிலையைச் சரித்துச் சாய்க்கும்  இணையவழிக் கல்வியைப் பொறுத்தவரை, மாணவர்களும் - பெற்றோர்களும் முக்கியப் பங்குதாரர்கள். ஆகவே இதனால் ஏற்படும் கலாச்சாரச் சீரழிவுகள், ஆபத்துகள், டிஜிட் டல் உட்கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு பள்ளி யிலும் பயிலும் மாணவர்களிடமும், பெற் றோரிடமும் கருத்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்”; ஆகவே இணையவழி உட் கட்டமைப்பு முழுமையாக இல்லாத தமிழ் நாட்டில், ‘நேரடியாகக் கற்றல் - கற்பித்தல்’ என்ற வகுப்பறைச் சூழல் மட்டுமே கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். “இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; நிழல் நிஜமாகிவிடாது” என்பதை அதிமுக. அரசு உணர்ந்து - அப்படியொரு வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கக் கூடாது என்றும்; அதன்மூலம் மாணவர்களிடையே பாகு பாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத் தின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடக் கூடாது. என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment