முதியவர்களாக வீட்டில் இருப்போர் தத்தம் நேரத்தை மிகவும் திட்டமிட்டு செல வழித்தால் முதுமை எப்போதும் ‘இளமையாகவே' தென் படக்கூடும்! அது பிறர் கையில் இல்லை; நம் மனதின் திட்டத்தால், செயலின் வடிவத்தால் அதை எளிதாக அடையலாம்.
உடற்பயிற்சி - பெரிதும் நடைப்பயிற்சி - அதற்கும் இயலாதவர்கள் வீட்டுக்குள்ளே நடந்து, தத்தமது அன்றாடக் கடமைகளை முடித்து மற்ற வர்களுக்குக் கூடுமான வரை ‘பாரமாக' இல்லாத அளவுக்கு நமது பணிகளை நாமே செய்ய இளமை முதற்கொண்டே பழகி வந்தால், இது இயல்பான தாகி விடும்; ஓய்வு பெற்றவர்கள்கூட திட்டமிட்டு பணிகளை வகுத்துக் கொள்ளலாம். உணவு - மதியம் ஒரு லேசான தூக்கம் 'siesta' - முழுத்தூக் கம் இரவு தூக்கத்தைக் கெடுத்து விடும் என்பதால் 40 நிமிட நேரம், அதிகம் போனால் - ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் படுத்து உறங்கி எழுந்து, தேநீர் அருந்தி, சிறு நடை நடந்து, எழுத்து பேச்சு, நூல்கள் படித்தல், தொலைக்காட்சிகளில் செய்தி களை அறிதல் - போதுமானவை. தேவையற்ற வையே அவற்றில் அதிகம் என்பதால், அதனைப் பார்த்த பலருக்கு இரத்தக் கொதிப்பு - படபடப்பு, கோபம், ஆத்திரம் எல்லாம் - தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்தால் வரக் கூடும். எனவே, முக்கியமானவை என்று கருதும் ஒரு சிலவற்றைத் தவிர்த்து மற்றவற்றைப் பெரும்பாலும் தவிர்த்து விடுவதே நல்லது.
நம் நாட்டுத் தொலைக்காட்சிகள் ‘அட்டைக் காப்பி', ஒருவர் துவக்கியதையே மற்றவர் போட்டி யிட்டுச் செய்தல் - புதிய புத்தாக்கச் சிந்தனைகள் அரிதினும் அரிதாகவே உள்ளன!
அவற்றில் சினிமா போதைதான் பெரிதும்!
இன்றேல் குற்றங்கள் பற்றிய விலாவரியான விசாரணைகள் இதன் பயன் பார்ப்பவர்களுக்குப் பூஜ்யம்தான்; இன்னொரு கெடுதியும் இதில் உண்டு; புதிதாகக் குற்றங்களை எப்படி இணைப் பது என்று சொல்லிக் கொடுப்பதற்கு மறைமுகமான பாடமாகவும் ஆகிவிடுகின்றன - மன அமைதியைக் குலைப்பதாகவும் உள்ளன! எனவே, அதற்குச் செலவிடும் நேரத்தைக் குறைத்து, நல்ல புத்தகங் களைப் படிக்கலாம்! பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ அவர்கள் வேலையை விட்டு வந்த பிறகு அவர்களிடம் சிறிது நேரம் அள வளாவி மனப்பூர்வமான திருப்தியை வாழ்க்கை யில் பெறலாம்; இது ஒரு கால அட்டவணை (Time-Table) போட்ட வாழ்க்கைபோல ஆக்கிக் கொள்வது சிறப்பானது.
உண்மையான நட்பு வட்டம் - அதன் தேவை முதுமையில்தான் மிக மிக முக்கியம்; தங்கள் வயதை ஒத்தவர்களின் நட்புறவு முதுமையில் மிகத் தேவை - உள்ளூர், வெளியூர் வட்டாரங்களில் - எங்கிருந்தாலும் சரி அவர்களோடு நீண்ட நேரம் செலவழித்து தம்மைத் தாமே செழுமையாக்கி கொள்வது முதியோர்களுக்கு மிகவும் முக்கியம்!
இளைய தலைமுறையினரும் இதமான சொற் களை - உரையாடல்களை - கனிந்த விசாரிப்புகளை - மகிழ்ச்சிதரும் அன்பளிப்புகளைத் தருவது முதியோருக்கு எல்லையற்ற இன்பத்தைத் தரும். அது பற்பல நேரங்களில் ஒரு வழிப்பாதையல்ல - இரு வழிப்பாதையாகவே அமைவது நல்லது.
முதுமையில் உள்ள கோளாறு - குறைபாடுகளில் ஒன்று - எவரிடமும் - அவரது சூழல் பற்றியே கவலைப்படாது - நீண்ட நேரம் (Non-stop) ‘தொணதொணப்பது!' போன்று பேசுவது - தவிர்க்கப்படுவது கட்டாயம்.
மற்றவர்கள் எவ்வளவு நேரம்தான் காது கொடுப்பார்கள்?
ஒருமுறை ஒரு வணிகத் துறை நண்பர் அனுபவ ரீதியாக ஒரு செய்தியை என்னி டம் பகிர்ந்து கொண்டார். நன்கொடை என்று கும்பல் கும்பலாக வரும் பல அரசியல் மற்ற அமைப்புக் காரர்களைக் கடைகளுக்கு முன்னால், நான் வெகு நேரம் பேச விடுவதில்லை. உடனே ஏதோ ஒரு தொகையை - உதாரணத்துக்கு 25 ரூபாய், 50 ரூபாய் தந்து அனுப்பி விடுவேன்; காரணம் அவர்களை நெடுநேரம் நிறுத்தி விவாதித்தால், பல நூறு ரூபாயின் வியாபாரம் கெட்டுப் போகும் சூழல் அமையும், அதனால்தான் அந்த அவசரம் என்றார்.
சரிதானே!
வீட்டில் முதியவர்களுக்கு அதிக ஓய்வுகள் உள்ளதால் வீட்டில் உள்ள மற்றவர்களும் தங்களு டன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத மனிதநேய மற்ற சிந்தனை. எதையும், 'ஒத்தறிவு' (Empathy) - பிறரின் நிலையில் நின்று யோசிக்கும் தன்மைப் படி நடந்துகொள்வது அனைவருக்குமே நன்மை!
அவரவர் நேரம் அவருக்குத்தானே! அதுவும் செல்போன் யுகத்தில் முதியவர்களிடம் இளைஞர் கள் வருவதே அபூர்வம்; வந்து நலம் விசாரித்து, சிறிது நேரம் அன்புடன் - பண்புடன் - பாசத்துடன் அவர்கள் உரையாடினால் அதுவே இவர்களுக்கு ஒரு "பொன்னான வாய்ப்பு" அல்லவா?
எனவே, மற்றவர் நிலையிலிருந்து நின்று, எதையும் ஆராயும் போதுதான், அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர முடியும்.
மேற்கிந்தியத் தீவுக்காரர்களின் பழமொழி ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் படித்தேன்.
"என்னைக் குறை கூறும்முன் எனது காலணியை மாட்டிக்கொண்டு கொஞ்ச தூரம் நடந்த பிறகு சொல்லுங்கள் - எனது நடை சரிதானா, இல்லையா? அதில் உள்ள இன்னல்கள் எவ்வளவு என்பது அனுபவிக்கும் எனக்கல்லவா தெரியும்; வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்து விமர்சிக்கும் மற்றவர் களுக்கு எப்படித் தெரியும்?" என்பதுதான் அதன் விரிந்த பொருள். எனவே புரிந்து நடந்தால் இன் பம் - புரியாமல் நடந்தால் துன்பம்.
எனவே, இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம்மிடம் தான் உள்ளது என்றே முதியோர்கள் எண்ணவேண்டும், அதைக் கற்று வாழப் பழகிக் கொள்ளவேண்டும்; நம் நோக்கும், போக்கும்தான் அதனை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் ஆகும், மறவாதீர்!
No comments:
Post a Comment