பெரியார் கேட்கும் கேள்வி! (27) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (27)

புராணப் புரட்டை விளக்கியது எது?



திருவாங்கூர் கோயிலைத் திறக்கச் செய்ததும், அச் சமஸ் தானத்தில் தீண்டாதாருக்குத் தெருவில் நடக்கவும் உரிமை இல்லாதிருந்த கோர நிலைமையை மாற்றியதும், நேற்று மதுரை அழகர் கோயில் ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் உள்ளே செல்ல முடிந்ததும், இவைகள் இன்று சர்வ சாதாரண மாக விஷயமாக மக்களால் கருதப்படக் கூடிய அளவு மக்கள் மனத்தைத் தீவிரத்தில் பக்குவப்படுத்தியதும் எது?


வேதம், ஆகமம், ஸ்மிருதி என்றால் கேட்டதும் கிடுகிடு வென நடுங்கி எதைச் செய்தால், எந்த வேதப்படி எந்த சாத்திரப்படி குற்றமாகுமோ என மக்கள் பயந்து பதைபதைத்து வாழ்ந்து வந்த நிலை மாறி உலகப் போக்குக்கு ஒத்ததும், அறிவுக்குப் பொருத்தமானதும் பகுத்தறிவுக்கு ஏற்றதுமான காரியங்களே நிகழ வேண்டும். எமக்கு அந்த நாளைய ஆகம வேதஸ்மிருதி புராண ஆபாசங்களைப் பற்றி இலட்சியமில்லை என்று பெரும்பாலோர் கூறும் நிலைமையை உண்டாக்கியது எது?


ஆகம விதிப்படி கோயில்கள் நடத்தப்பட வேண்டுமானால் அங்கு ஆடுவதற்கு என ஒரு கூட்டம் இருக்க வேண்டும்; அக்கூட்டம் விபசாரத்தால் பிழைக்க வேண்டும் என்று இருந்த நிலைமை மாறி, தாசி என்ற பேச்சுக்கே இடமின்றி அவர்களை மறையச் செய்து வருவது எது?


- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 16.7.1939


- ‘மணியோசை’


No comments:

Post a Comment