ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:    



  • இந்திய - சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் வெளிநாட்டுப் பணம் பற்றிய விவாதத்தில் பாஜக அரசும், கட்சியும் ஈடுபடுவது, பிரச்சினையைத் திசை திருப்பும் செயலாகும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:    



  • இந்திய-சீன எல்லையில், சீன ஊடுருவல் இல்லையென்றால், இந்திய ராணுவத்தின் 20 வீரர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது வீடியோ உரையில் மோடி அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொல்லபட்டதற்காக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து ஜெயராஜ் - பெனிக்ஸ் இறப்புக்கு நீதி வேண்டுமென்ற முகப்புச் செய்தி, சமூக வலைத்தளமான டிவிட்டரில் முதல் இடத்தில் இருந்தது.

  • காவல் நிலையத்தில் கொல்லப்பட்டதாக வந்துள்ள செய்தியை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மனித உரிமை ஆணையத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதி அளிக்கப்பட்டது.

  • ஜம்மு காஷ்மீரில் வெளி மாநிலத்தவர் எவரும் நிலம் வாங்குவ தற்கான தடை உள்ள நிலையில், மத்திய மோடி அரசு புதிய குடியேற்றச் சட்டம் ஏப்ரல் 2020இல் கொண்டு வந்துள்ளது. இதன் அடிப்படையில் வெளிமாநிலத்தவர்கள் 25000 பேருக்கு, மாநிலத்தில் வசிப்பவர்கள் என சான்றிதழ் அளித்துள்ளது. இச்சட்டத்தின் மூலம், இவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையையும், வேலையில் சேரும் உரிமையையும் பெறுகிறார்கள்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • பஞ்சாப் மாநிலத்தில் முதன் முறையாக ஒரு பெண்மணி - வினி மகாஜன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் தின்கர் குப்தா, பஞ்சாப் மாநில டி.ஜி.பி. பதவி வகிக்கிறார்.

  • பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் ஆலோசித்து வரும் நிலை யில், கரோனா தொற்று, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இந்திய- சீன எல்லைப் பிரச்சினை அனைத்தும் முதன்மையாக உள்ளன. ஆனால், இதனை எதிர்க்கட்சிகள் சரிவரக் கையாளும் சூழல் தற் போது காணப்படவில்லை என தலையங்கச் செய்தி கூறுகிறது.


தி இந்து, டில்லி பதிப்பு:



  • கரோனா தொற்று நீங்கிய உலகத்தை இன்னும் பல பிரச்சினை களைச் சந்திக்கக் கூடியதாக அமைக்கும் வகையில் இப்போதே சில சக்திகள் செயலாற்றி வருகின்றன என கல்வியாளர் நோம் சோம்ஸ்கி மக்களை எச்சரித்துள்ளார்.

  • பீகார் தேர்தலில், எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகளையும் இணைத்து, பாஜக கூட்டணியை முறியடிக்க வேண் டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

  • பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ளதாக கூறும் கரோனா தடுப்பு மருந்து - விஞ்ஞானத்திற்கும் முட்டாள் தனத்திற்கும் நடைபெறும் போட்டியாகும் என இந்து நாளிதழ் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லி பதிப்பு:



  • பிள்ளையார் சிலையை 4 அடி உயரத்திற்கு மேல் தயாரிக்க வேண்டாம் என்றும், அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பிள்ளையார் பிறந்த நாள் விழா கொண்டாடும் கமிட்டிகளுக்கு மகா ராட்டிரா அரசு அறிவுறுத்தியுள்ளது.


- குடந்தை கருணா,


27.6.2020


No comments:

Post a Comment