அரசியல் ரீதியாக என்றால், ஒரே ஓர் எதிரியோடுதான் போராடவேண்டும்
தந்தை பெரியாரின் தலையங்கத்தை எடுத்துக்காட்டி ‘விடுதலை' ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, ஜூன் 18 அரசியல் ரீதியாக என்றால், ஒரே ஓர் எதிரியோடுதான் போராடவேண்டும். ஆனால், சமுதாயப் பணி செய்து, சமுதாய உரிமையைப் பெறவேண் டுமானால், அந்த எதிரிகள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்று சொல்லும்பொழுது, அய்ந்து வகை எதிரிகளைச் சொல்லுகிறார் தந்தை பெரியார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்க வுரையாற்றினார்.
‘விடுதலை'யின் வீர வரலாறு!
கடந்த 13.6.2020 அன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘‘விடுதலை'யின் வீர வரலாறு'' எனும் தலைப்பில் காணொலி மூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நமக்கு முன்னாலே என்ன பிரச்சினை, இந்த வர லாற்றை எப்படி முன்னெடுத்துச் செல்லவேண்டும்; அடுத்த கட்டத்திற்கு நாம் போகவேண்டும் என்று சொல்லு கிறபொழுது நண்பர்களே, நம்முடைய பணி எளிதான பணியல்ல!
‘விடுதலை'யினுடைய முக்கியத்துவம் என்ன?
ஓர் இராணுவ வீரன், எந்நேரமும் எல்லையைக் காத்துக் கொண்டிருக்கும்பொழுது, எப்பொழுது வேண்டு மானாலும், ஆபத்துகள் வரலாம் என்று அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதுபோல, இந்த இனத்தின் இன மீட்பர்களாக இருந்து, நாம் நம்முடைய பணிகளைச் செய்கின்றபொழுது, மூடநம் பிக்கைகளுடைய தாக்கம், தொற்று நோயின் தாக்கம், இன்னொரு பக்கம் எதிரிகளுடைய தாக்கம் - இதைப் பயன்படுத்திக் கொண்டு நம்முடைய உரிமைகளைப் பறிக்கின்ற ஒரு திருட்டுக் கூட்டம் போன்ற மற்ற செயல்கள். இவை அத்தனையும் நடந்து கொண்டி ருக்கும்பொழுது, இவை அத்தனையையும் கண் காணித்து சொல்லக்கூடிய ஒரே ஒரு ராடார் கருவி என்னவென்றால், ‘விடுதலை'தான். இந்த ‘விடுதலை' யினுடைய முக்கியத்துவம் என்ன? இது அளவு சிறியதாக இருக்கலாம். நோயைத் தீர்க்கும் மருந்து கேப்சூல்களாகத்தானே இருக்கும். சிறுகுப்பிகளில் தானே, ஊசி போடுகிறோம். அதுபோல, ‘விடுதலை' ஊசி போடும். அதுபோன்று மருந்துகளாகப் பயன் படும்.
அதுபோல, நாம் பல எதிரிகளோடு போராட வேண்டியிருக்கிறது என்று சொல்லும்பொழுது, அய்யாவினுடைய சிந்தனையைப் பாருங்கள்.
1941 இல் சென்னையில் ‘விடுதலை'யைத் தொடங் கும் பொழுது, நமக்கு முதலில் அடித்த எச்சரிக்கை மணி!
அய்ந்து வகை எதிரிகள்
அரசியல் ரீதியாக என்றால், ஒரே ஒரு எதிரியோடு தான் போராடவேண்டும். ஆனால், சமுதாயப் பணி செய்து, சமுதாய உரிமையைப் பெறவேண்டுமானால், அந்த எதிரி கள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்று சொல்லும்பொழுது, அய்ந்து வகை எதிரிகளைச் சொல்லுகிறார்.
- வருணாசிரம தருமிகள்
- சீர்திருத்தம் பேசும் மதக்காரர்கள்
- மதத்தின் பெயரால் கோடிக்கணக்கான செல்வ மும், செல்வாக்கும் பெற்றிருக்கும் மடாதிபதிகள்.
- மதத்தின் பெயரால் புத்தகம் எழுதி விற்றுக் கொள்ளையடிக்கும் வியாபாரிகள்.
- மதத்தின் பெயரால், பாமர மக்களை ஏமாற்றி, உயிர் வாழும் படிப்பாளிகள் என்று சொல்லிக் கொள்ளும் பண்டிதர்கள்.
ஆகிய இன்னும் பலருடன் நாம் போராடியே தீர வேண்டும். நாம் அவர்களுடன் போராட விரும்பா விட்டாலும், அவர்கள் நம்மை விடமாட்டார்கள்.
வலுச் சண்டைக்கிழுப்பார்கள். நாம் வந்த சண் டையை விட்டுவிடும் கோழைகளல்ல. சுருக்கமாகச் சொன்னால், நம்முடைய போராட்டத்திற்கு, ஆதர வாளர்கள் சிலர்; எதிரிகள் பலர்.
‘விடுதலை'யைக் காப்பாற்றவேண்டும் என்பதற் காக, நீங்கள் எல்லோரும் உதவி செய்கிறீர்கள். அதற்குத் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னுங்கேட்டால், நம்முடைய ஆதர வாளர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள் - மகிழ்ச்சி. ஆனாலும், நம் முன்னால் இருக்கக்கூடிய பணி என்பது ஒரு அசாதாரணமான பணியாகும்.
நம்முடைய போராட்டத்திற்கு
சிறந்த ஆயுதம் ‘விடுதலை!'
மேலும் அந்தத் தலையங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள், இந்த நிலையில், நம்முடைய போராட்டத்திற் குச் சிறந்த ஆயுதம் பத்திரிகை. அந்த தினசரி பத்தி ரிகையாக ‘விடுதலை' ஒன்றுதான் உள்ளது.
80 ஆண்டுகளுக்கு முன்பும் அதுதான்; இன் றைக்கும் அதுதான். பார்ப்பான் என்று எழுதக் கூடிய சொல் என்பது கொச்சையான சொல் அல்ல. அதுதான் இலக்கியத்தில் இருக்கின்ற சொல். ஆனால், அப்படி எழுதினால், துடிக் கிறார்கள்.
சிலப்பதிகாரத்தில், ‘மாமுது பார்ப்பான்’,
திருக்குறளில் ‘மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்’,
ஏன்? பாரதியாரை எடுத்துக் கொண்டாலும், ‘ பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே’ என்பதுதான்.
இதுபோன்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்; இலக்கியத்திலிருந்து ஏராளமாகச் சொல் லலாம். தமிழ் இலக்கியத்தில் ‘பிராமணன்' என்ற சொல்லே கிடையாது.
இலக்கிய ரீதியாக இருக்கக்கூடிய ஒரு சொல்லான ‘பார்ப்பான், பார்ப்பனர்' என்று சொன்னால், ‘‘அய்யோ, இழிவுபடுத்தி விட்டார்கள்'' என்கிறார்கள். யார் சொல்வது என்றால், நம்முடைய சகோதரர்கள் - சூத்திரன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள்.
நம்மை பச்சையாக, தாசி மகன் என்று பொருள் உள்ள மனுதர்மத்தை மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக் கிறவனை - ‘பிராமணன்' என்பதற்குப் பதிலாக பார்ப்பான் என்று எழுதிவிட்டால், அவர்மீது வழக்குப் போடு, இவர்மீது வழக்குப் போடு என்று மிரட்டினால், அவை அத்தனையையும் எதிர்கொள்ள வேண்டியவர்கள் நாம்.
80 ஆண்டுகளுக்கு முன்பு
தந்தை பெரியாரின் எச்சரிக்கை!
80 ஆண்டுகளுக்குமுன்பு பெரியார் அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளார் என்பதைப் பாருங்கள்.
நம்முடைய போராட்டத்திற்குச் சிறந்த ஆயுதம் பத்தி ரிகை. அந்த தினசரி பத்திரிகையாக ‘விடுதலை' ஒன்றுதான் உள்ளது.
நமது சமுதாய உரிமைப் போராட்டம்தான் நாம் செய் யும் புரட்சி.
அறிவாயுதம்தான்,
வலிவான ஆயுதம்தான் ‘விடுதலைt!'
இதைத்தான் சந்திரசேகரன் அவர்கள் தொடக்கவு ரையில் சொன்னார்.
நாம் செய்யும் புரட்சி என்பது என்ன? புரட்சி என்பதால், ஆயுதத்தை எடுக்கவேண்டிய அவசிய மில்லை. அறிவாயுத்ததை எடுத்தால் போதும். அந்த அறிவாயுதம்தான், வலிவான ஆயுதம்தான் ‘விடு தலை.'
எனவே, இந்தப் புரட்சியை ஆயுதம் தாங்கியோ அல்லது அகிம்சை என்று சொல்லக்கூடிய கோழைத் தனத்தின் மூலமோ செய்து முடிக்க நாம் தீர்மானிக்க வில்லை.
தமிழர்களுக்கு உணர்ச்சி உண்டாக்குவதன்மூலம், அறிவுப் பிரச்சாரம், தினசரிப் பிரச்சாரம் - ‘விடு தலை'யை தினசரி ஒருவர் படித்துவிட்டால், மருந்து வேலை செய்யும்.
இப்பொழுது கரோனா தொற்று நோய்க்கு மருந்தில்லை - அதற்கு என்ன செய்யவேண்டும்? உடற்பயிற்சி செய்ய« வண்டும் - அதேநேரத்தில், உடலில் நோய் எதிர்ப்புச் சக் தியை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிறார்கள்.
இதைத்தான், இந்த இனத்தில், ஆரியக் கிருமிகள் உள்ளே நுழைகின்ற நேரத்தில், நோய் எதிர்ப்புச் சக்தியை நாம் அதிகப்படுத்தவேண்டும். அந்த நோய் எதிர்ப்புச் சக்தி ஊட்டச் சத்திலிருந்துதான் வருகிறது. ஆகவே, நிறைய சாப்பிடுங்கள், பயிற்சி செய்யுங்கள் என்கிறார்கள். அது தான், ‘விடுதலை.'
‘விடுதலை'யைப் படிப்பதனால்தான், அந்த வாய்ப்பு களை உருவாக்க முடியும். ‘விடுதலை' என்றால், ஒவ்வொரு நாளும் ஊசி போடுவது போன்று இருக்கும்.
‘விடுதலை'யில் வந்த அறிக்கையின்மூலம்தான்!
மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கு வெறும் பூஜ்ஜியம்தான் கிடைத்தது என்பதை நாம் கடந்த மாதம் விளக்கிச் சொன்னதனுடைய விளைவு, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம், வழக்குகள், உச்சநீதிமன்றம், இன்றைக்கு உயர்நீதி மன்றம், தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கட்சிகளும் வழக் குத் தொடர்ந்தவுடன், ஆளும்கட்சியும் விழித்துக் கொண்டது. ஆளும் கட்சியும் வழக்குத் தொடுத் திருக்கிறது என்றால், இவை அத்தனையும் எப்படி ஏற்பட்டது தோழர்களே, ‘விடுதலை' என்ற ஒரு நான்கு பக்க ஏட்டிலே வந்த அறிக்கையின் மூலம்தான் வந்தது என்பதை மறந்துவிடாதீர்கள்.
எனவே, அந்தச் சிறு பொறிதான், இவ்வளவு பெரிய சிந்தனையை உண்டாக்கியிருக்கிறது.
உச்சநீதிமன்ற நீதிபதி கோபத்துடன் சொல்கிறார், ‘‘இங்கே ஏன் வந்தீர்கள்; உயர்நீதிமன்றத்திற்குப் போங்கள்'' என்று சொல்லக்கூடிய ஆரியத்தினுடைய உணர்வுகள் பல ரூபத்தில் வருகின்றன.
பி.ஜே.பி. தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம்!
எந்த அளவிற்கு நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என் றால், இன்றைக்குப் பி.ஜே.பி. தலைவர், ‘‘இட ஒதுக்கீட்டில் நாங்களும் உறுதியாகத்தான் இருக்கி றோம்'' என்று சொல்கிற அளவிற்கு வந்திருக்கிறது.
பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப் போகி றது. பீகாரில் பெரியார் இருக்கிறார்; இந்தியா முழுவதும் பெரியார் இருக்கிறார். சமூகநீதி இருக்கிறது.
அதைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு, அடித் தளம் எங்கே இருந்தது? இந்த ‘விடுதலை'யிலிருந்துதான் கிளம்பியது நண்பர்களே, அதுதான் மிக முக்கியம்.
தமிழர்களுக்கு உணர்ச்சி உண்டாக்குவதன்மூலம், தமிழர்களுடைய தற்கால மானக்கேடான நிலையை, அவர்களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம், அவர் களை ஒன்று சேர்க்க விரும்புகின்றோம்.
ஒன்று சேர்த்து, சமுதாய இழிவு நீக்க, புரட்சி செய்ய விரும்புகிறோம்.
‘'சூத்திரன் என்றால், ஆத்திரங்கொண்டு அடி'' என்ற நிலை கிடையாது. ஏனென்றால், சூத்திரன் என்று சொல் லக்கூடிய வாய்ப்பு இன்றைக்குக் கிடையாது. ஆனால், சட்டத்தில் இருக்கிறது, அதைப் போக்கவேண்டும்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று வாய்ப்புகள் நமக்கு வந்தால், இன்னமும் ஜாதி உணர்ச்சிகள் என்று வரும்பொழுது அதை எதிர்க்கக் கூடிய உணர்வுகள் வருகிறது.
இன்றைக்கும் உத்தரப்பிரதேசத்திலே ஒரு தாழ்த்தப் பட்ட சகோதரர் கொலை செய்யப்பட்டால், அதற்குக் குரல் கொடுப்பதற்கு, தமிழ்நாட்டில் வெளி வரக்கூடிய ‘விடு தலை', அதனுடைய அறிக்கைகள் இருக்கின்றன.
குடியரசுத் தலைவர், கோவிலுக்குள் போக முடிய வில்லையானால், அதை சொல்வதற்கு மற்ற ஏடுகள் தயங்கு கின்ற நேரத்தில், ‘விடுதலை' அதை முழங்கு கிறது.
அய்யா அவர்கள்
சாசனம் எழுதி வைத்திருக்கிறார்!
எனவேதான் நண்பர்களே, ஒரு சிறு பொறி, ஒரு சிறு ஆணி என்பதுதான் மிக முக்கியமானது.
ஒன்று சேர்த்துச் சமுதாய இழிவு நீக்கப் புரட்சியைச் செய்ய விரும்புகின்றோம். அந்தப் புரட்சியை உண் டாக்கவே, நமது ‘விடுதலை' ஓயாமற் பாடுபடும்.
அய்யா அவர்கள் சாசனம் எழுதி வைத்திருக்கிறார். இன்றைக்கு என்னுடைய வேலை என்ன? எனக்கு மகிழ்ச்சியான வேலை. நான் குடும்பத்தை விட்டு விட்டு வந்தேன் என்றெல்லாம் இங்கே சொன்னார்கள்.
நான் சொல்கிறேன், குடும்பத்தைவிட்டோ, குடும்ப நலனை விட்டோ வரவில்லை. என்னுடைய குடும் பத்தை நான் பெருக்கிக் கொண்டேன்.
உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் என்னுடைய குடும்பத்தவர்கள்!
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய உணர்வாளர் கள், பகுத்தறிவாளர்கள்தான் என்னுடைய குடும்பம்.
என் குடும்பம் என்பது ஒரு சிறிய குறுகிய குருதி வட்டத்திற்குள் இருப்பது அல்ல.
என் குடும்பம் என்பது
யார் யார் சமூகநீதிக்குப் பாடுபடுகிறார்களோ,
யார் யார் தன்மானத்திற்குக் குரல் கொடுக்கிறார்களே,
யார் யார் இனமானத்தை ஏற்றுகிறார்களோ,
யார் யார் மூடநம்பிக்கைகளை ஒழித்துவிட நினைக்கிறார்களோ,
யார் பெண்ணடிமை நீங்கி, மண்ணடிமை நீங்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ,
யார் யார் தங்களுடைய உரிமைகளைப் பெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ,
மானமும், அறிவும் உள்ள மனிதர்களாக தங்களை ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர் கள் அத்தனை பேரும் - உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் என்னுடைய குடும்பத்தவர்கள் - நான் அவர்களுடைய குடும்பத்தில் உறுப்பினன் என்று நினைக்கின்றபொழுது, இந்தப் பணி செய்யும் பொழுது, நான் குடும்பத்தைவிட்டு வரவில்லை. என் குடும்பம் பெரிது என்று ஆக்கிக்கொண்டு, அந்த வாய்ப்பை மிகப்பெரிய அளவிற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்ற மகிழ்ச்சிதான், என்னை உற்சாகத்தோடு பணியாற்ற வைக்கிறது. எந்தவிதமான நிலையிலும் உற்சாகக் குறைவு இல்லை. ஏனென்றால், சலிப்போ, அலுப்போ கொள்ளவேண்டிய அவசிய மில்லை.
இதற்காகவே இன்றுமுதல் சென்னையிலிருந்து நமது ‘விடுதலை' வெளிவருகிறது என்றார்.
எவ்வளவு பெரிய தலைவருக்கும் சலிப்பும், சங்கட மும் ஏற்படும் என்று சொன்னாலும்கூட, தந்தை பெரி யார் அவர்களுக்கு அப்படிப்பட்ட நிலை வந்ததில்லை.
(தொடரும்)
No comments:
Post a Comment