வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (6) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 17, 2020

வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (6)


ஜாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு- தாழ்வு போகுமா?


 இவை ஒருபுறமிருக்க, இந்த ஜாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத் தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும், உரிமை களையும் பார்ப்போமானால் கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதிப் பேரைச் சொல்லிக் கொள்ள முடியாத படியும், அதைக் கனவிலும் நினைக்க முடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம். அதாவது நாலாவது ஜாதியார்களாக சூத்திரர்கள் என்று சொல்லப்படும் வகுப்பாருக்குப் பார்ப்பனர்கள் ஏற் படுத்தியிருக்கும் உரிமையானது எப்படி இருக்கின் றது என்று பார்த்தால் இப்போது "பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்" (அதாவது கிரிமினல் ட்ரைப்) என்று சொல்லக்கூடியவர்களுக்குச் சர்க்கா ரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிர்பந்தத்திற்கும் சட்ட திட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக் கும் சிறிதுகூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரி யாகவே ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.


தர்ம சாத்திரங்கள் கூறுவது என்ன?


உதாரணமாக, அதுவும் தர்ம சாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லு வோம்.


"ஸ்நாத மவம், கஜமத்தம் ரிஷபம்


காம மோஹிதம் சூத்தரமக்ஷரசம்


யுக்தம் தூரதப் பரிவர்ஜையேல்"


அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் "மதம் கொண்ட யானையையும், காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும். எழுத்துத் தெரிந்த சூத்திரனை யும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது" என்பது கருத்தாகும்.


"ஜபஸ், தப, தீர்த்தயாத்திர, பிரவர்ஜ் ஜய, மந்தர சாதனம் தேவதாரா


தனம் சசய்வஸ்திரீ சூத்திர பத தானிஷள்" - அதாவது ஜபம், தபசு, தீர்த்தயாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்த காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக் கூடாது என்பது கருத்தாகும்.


"நபடேல் சமஸ்கிருதம் வாணீம்" - சூத்திரன் சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும்.


"நைவ சாதிரம் படே நைவ சுருணுபாத் வைதி காக்ஷரம் நஸ்நாயாது தயால் பூர்வம் தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்" -


சூத்திரன் சாஸ்திரம் படிக்கவோ, வேதத்தைக் கேட் கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்ய வும் கண்டிப்பாய் கூடாது என்பது அதாவது.


"இதிஹாச புராணானி நபடேச்ரோது மர்ஹசி"


இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.


"சாதுர்வர்னியம்


மயாசிருஷ்டம்


பரிசரியாத் மகம்


கர்மம் சூத்ரஸியாபி பாவனாம்"      (கீதை)


நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப் பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்குப் பிராமண சிசு ருஷைதான் தர்மம் என்பது கருத்து.


இது போல் ஆயிரக்கணக்காக எழுதிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக் கப்பட வேண்டியவை என்று வேதங்கள், தர்ம சாஸ் திரங்கள் பகவான் வாக்குகள் என்று சொல்லப்படு பவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.


ஜாதி இருக்கும்வரை


உயர்வு - தாழ்வு எப்படி ஒழியும்?


எந்த காரணத்தாலோ இந்து மதத் தர்மத்தை அனுஷ்டித்துத் தீரவேண்டியதல்லாத ஒரு ஆட்சி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சில ராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப் படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலை யாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கென்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி, அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.


இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப் பிரிவு இருக்கும் வரை உயர்வு தாழ்வு போகாது என்று கண்டிப்பாகும்.


இன்றையதினம் தேசியவாதிகளாய் இருக்கின்ற வர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூரண சுயேச்சை அடையவேண்டுமென்கின்ற உண்மை யான ஆசையுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள்ளைக்கார ஆட்சியிருக்கும் போதே ஜாதி வித்தியாசங்கள் எல்லாம் ஒழியும்படியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டிதுதான் அறி வுள்ள வேலையாகும். அதைவிட்டு விட்டு, முதலில் "நீ போய் விடு, நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்" என்று சொன்னால் அது, "தான் சாவதற்குதானே மருந்து குடித்தது" போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 999 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண் டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்ப தோடு ஒவ்வொருவரும் மேல்ஜாதி ஆகவேண்டும் என்று ஆசைப்படுவதும் தனக்குக் கீழ் பலஜாதிகள் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவதுமான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்றையதினம் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு வருணாச்சிரம கொள்கையும், ஜாதி ஆதிக்கத் திமிரும் உடையவர் களான மக்களிடம் ஆட்சியும் பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்திலும் ஜாதிக் கொடுமைகள் ஒழியா.


- ('குடிஅரசு', தலையங்கம், 30.11.1933)


(தொடரும்)


No comments:

Post a Comment