ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 15, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:



  • சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 140 மருத்துவர்கள், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துவமனை டீன் மருத்துவர் ஆர்.ஜெயந்தி மற்றும் 40 மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அடங்குவர்.

  • அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் கருப்பர் இனத்தைச் சேர்ந்த ரேஷார்ட் புரூக்ஸ் காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல் லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பதட்டத்தையும் வன்முறையையும் அதிகப்படுத்தி வருகிறது.


டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:                     



  • கரோனா பாதிப்பு நாடு முழுவதும் மக்களை அவதிக்குள்ளாக்கிய சூழலில், பா.ஜ.க., பீகாரில் தேர்தல் பரப்புரையை 72,000 தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் துவக்குகிறது. பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என முன்னாள் வெளியுறவு அதிகாரியும், அய்க்கிய ஜனதா தளத் தலை வர்களுள் ஒருவரான பவன் கே.வர்மா தனது கட்டுரையில் தெரிவித் துள்ளார்.

  • நேபாள அரசு வெளியிட்டு வரைப்படத்தில் இந்திய எல்லை யையும் தன்பகுதியாக சேர்த்து வெளியிட்டுள்ளது, மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என தலையங்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:



  • அமெரிக்காவில் கருப்பர் இன மக்கள் இரண்டு வகை சிந்தனைகளுக்கிடையே தற்போது போராட்டத்தை நடத்துகிறார்கள். ஒன்று, மார்ட்டின் லூதர் கிங் ஏற்படுத்திய அமைதி வழி; மற்றொன்று மால்கம் எக்ஸ் சிந்தனையான ஆயுத வழி என ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரமீன் ஜகான்மேக்லூ கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


எகனாமிக் டைம்ஸ் மும்பை பதிப்பு:



  • கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப் பட்டுள்ள முழு அடைப்பு மேலும் தொடராது என்றாலும், மாநிலங்கள் தங்களது சூழலைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கவும், வீடுதோறும் கரோனா தொற்று பற்றி கண்டறிய நடவடிக்கைகள் எடுத்திடவும் அறிவுறுத்தப்படும் எனத் தெரிகிறது. இம்மாதம் 16, 17 ஆகிய தேதி களில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் சந்திக்கும்போது, இத்தகைய கருத்தைத் தெரிவிப்பார் என்றும் அரசு அதிகாரி கூறியுள்ளார்.


- குடந்தை கருணா,


15.6.2020


No comments:

Post a Comment