கடலூர் ஒன்றிய கழகத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சீரிய விடுதலை வாசகரும், நம் குடும்பம் மீதும் எல்லையற்ற அன்பும், மரியாதையும் கொண்ட மானமிகு தோழர் குப்புசாமி அவர்கள் நேற்று (13.6.2020) மறைந்தார் என்ற செய்தி நம்மை மட்டுமல்ல - நமது குருதிக்குடும்பம், கொள்கைக் குடும்பத் தவர் அனைவரையுமே ஆழ்ந்த துயரத் தில் ஆழ்த்தியது.
அதிகம் படித்திராத அவருக்கு ஆசான் தந்தை பெரியாரும், 'விடுதலை'யும், கழகப் பிரச்சார மேடைகளும் தான்.
படகுத் தொழிலில் ஈடுபட்டு உழைத்த அவருக்கு ஒரே இளைப் பாறுதல் கழகப் பணி தான்.
எவரிடத்திலும் அடக்கமாகப் பேசி தனது மறுக்க முடியாத வாதங்களை எடுத்து வைத்து வெற்றி கண்டவர். கருஞ்சட்டைக் கடமை வீரர். கடலூர் நகரத்தில் ஒருமுறை கூட்டம் நடத்த வசூலித்த பணத்தை - நன்கொடையை அக்கூட்டம் நடத்த அனுமதி கிடைக்காததால், கொடுத்தவர்களிடம் கடை கடையாகச் சென்று திருப்பிக் கொடுத்து, அவர்களை வியப்பில் ஆழ்த்திய நாணயத்தின் வடிவமான பெரியார் பெருந்தொண்டர்.
எங்கள் தெருக்காரர். நெஞ்சில் சுமக்கும் துயரத்துடன் அவரது குடும்பத்தினருக்கு, பிள்ளைகள் மற்றும் தோழர்களுக்கும் ஆறுதல் கூறுகிறோம். அவருக்கு நமது வீரவணக்கம்.
- கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: நேற்றைய காணொளி காட்சியின்போது இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment