செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 14, 2020

செய்தித் துளிகள்....

* சிறீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் பழனி - கரோனா தொற்றுக்கு ஆளாகி தனியார் மருத்துவமனையில் அனுமதி.


* சென்னையில் மேலும் 2000 செவிலியர்கள் நியமனம்.


* திடீரென சுவை, வாசனை உணர்வை இழந்தோர்களுக்கும் கரோனா பரிசோதனை - மத்திய அரசு அறிவிப்பு.


* வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு பிளாஸ்மா மருத்துவம் அளித்து குணம் - இது நடந்தது கேரளாவில்.


* முகக் கவசம் - நோய்ப் பரவலைத் தடுக்கிறது - அமெரிக்க தேசிய அறிவியல் அகடமி கூறுகிறது!


* 88 நாட்கள் தடைக்குப் பிறகு தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.


* தஞ்சாவூர் மாவட்டத்தில் 462 கி.மீ. தூர சாலை விரிவாக்கத்துக்கு ரூ.1165 கோடிக்கு டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் - இது குறித்து வழக்குப் பதிவு செய்ய ஆணை பிறப்பிக்கக் கோரியும் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


* உலகெங்கும் கரோனாவால் உயிர் இழந்த ஆண்களே அதிகம். ஆனால் இந்தியாவிலே பெண்கள்தான் அதிகம் என்று - டில்லி பொருளாதார வளர்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கணிப்பு.


* கருநாடகாவில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, தேவகவுடா (மதசார்பற்ற ஜனதா தளம்) ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வு.


No comments:

Post a Comment