‘சூத்திரர்' என்ற சொல் லுக்கு விபசாரி மகன் என்பது உள்பட ஏழு வகையான கேவலம் அவன் பிறப்பின் அடிப்படையில் நிலைநாட் டப்படுகின்றன.
அவனுக்குக் கல்வி கற் பிக்கக் கூடாது என்பதில் ஹிந்து சாத்திரங்கள் அனைத் தும் குறியாகவே இருந்திருக் கின்றன.
‘கீழ்ஜாதிக்காரர்களுக்கு அறிவைப் புகட்டக் கூடாது; அப்படி ஓர் ஆசிரியன் சூத் திரனுக்குக் கல்வி புகட்ட முயற்சித்தால் அவன் கடும் தண்டனைக்கு உள்ளாக்கக் கடவன். ஒரு பிராமணன் சூத் திரனுக்குக் கல்வி கொடுத் தால், பிராமணர்கள் அவனை ஜாதிக் கட்டுப்பாடு செய்ய வேண்டும். அந்தப் பார்ப்பான் ஒரு சண்டாளனைப் போல் நடத்தப்படவேண்டும். கல்வி கற்ற சூத்திரர்களையும் ஊரை விட்டே விரட்டவேண் டும்.'
(ஆதாரம்: ஸ்கந்த புராணம், விஸ்வ காண்டம்,
அத்தியாயம் 19).
‘ஒரு சூத்திரன் வேத மந் திரங்களைக் காதால் கேட்க நேர்ந்திடின், அவன் காது களில் உருக்கிய உலோகத் தினை ஊற்ற வேண்டும். அவன் வேத மந்திரங்களை ஓதினால் நாக்கை வெட்ட வேண்டும், அவன் சில மந்திரங்களை மனப்பாடம் செய்து இருந்தானேயானால் அவனைக் கோடரியால் வெட்ட வேண்டும்.'
- கவுதம சூத்திரம், 2/3/4
கல்வியில் பஞ்சமர்களும், சூத்திரர்களும் ஏன் மேலே வர முடியவில்லை, பார்ப் பனர்களுடன் போட்டியிட முடியவில்லை என்பதற்கான வேர் இங்கிருந்துதான் கிடைத்தது.
புகழ்பெற்ற ஆய்வாளர் சரஸ்வதி என்பார் இவ்வாறு கூறுகிறார்.
‘‘அரசு உத்தியோகங்களி லும், படிப்பறிவு தேவைப் படும் தொழில்களிலும் பிரா மணர்கள் ஏற்றம் பெற்றிருப் பது வேத காலத்திலிருந்தே அவர்கள் பெற்ற ஏற்றத்தின் தொடர்ச்சி என்று கருதப்படு கிறது. ஒடுக்கப்பட்ட பெரும் பான்மையோர் தங்களை அடக்கி ஒடுக்கும் சிறுபான் மையினருடன் தொடுத்த புரட்சிதான் தற்காலத்தில் பிராமணரல்லாதாருக்கும், பிராமணருக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் மோதலின் கரு'' என்று ஓர் ஆய்வாளர் குறிப்பிட்டிருப்பதைக் குறிப் பாகக் குறித்துக் கொள்ள வேண்டும்.
1901 ஆம் ஆண்டில் எடுக் கப்பட்ட சென்னை மாகா ணத்து மக்கள் தொகைக் கணக்குக் கீழ்க்கண்ட விவரத் தைத் தருகிறது.
சென்னை மாகாணத்தில் வாழும் மக்கள் பிரிவு, பிராம ணர் 3.4%, சூத்திரர்கள் 94.3% என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1885-87 இல் தொகுக்கப் பட்ட இந்திய அரசு அறிக் கையில் (Imperial Gazetteer of India) தென்னிந்தியாவில் மக்கள் தொகை பிராமணர் களாகவோ, சூத்திரர்களா கவோ, பறையர்களாகவோ (அதாவது தீண்டத்தகாதவர் களாகவோ) பதிவு செய்யப் பட்டு இருக்கிறது.
சூத்திரர் என்ற இந்த இழி நிலை எப்பொழுது ஒழிந்தது? ‘‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!'' என்ற ஈரோட் டுப் பெருமான் தந்தை பெரி யாரின் இடி முழக்கத்தால்தான் ஒழிந்தது - ஆம் ஒழிக்கப் பட்டது!
- மயிலாடன்
No comments:
Post a Comment