கரோனா காலத்திலும் பாலிசி புதுப்பிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

கரோனா காலத்திலும் பாலிசி புதுப்பிப்பு

சென்னை, ஜூன் 11- பாரதி  ஆக்ஸா லைஃப்  காப்பீடு நிறுவனம் சென்ற  வணிக  வருடமான  2018-19இன்  ரெனுவல்  ப்ரீமியமான  1,164 கோடியிலிருந்து, 17% வளர்ச்சிப்  பெற்று  மார்ச்  31, 2020இல்  1,359 கோடி ரெனுவல்  ப்ரீமியத்தைப் பெற்றுள்ளதாக  தெரிவித்துள்ளது.


 இந்த  நிறுவனத்தின் மொத்த  ப்ரீமியம்  வருமானம் 2018-19இல் ரூ.2,076 கோடியாக  இருந்து, 5 சதவீத வளர்ச்சியடைந்து  ரூ .2,187 கோடியை  அடைந்துள்ளது. மேலும், கம்பெனி அதன் புது  வணிக  ப்ரீமியம்  வருமானம் 2019-20இல் சென்ற  வருட  நிதி  கால வருமான மான  ரூ .911 கோடியை  ஒப்பிடும்  பொழுது ரூ.829 கோடியை அடைந்துள்ளதாக  தெரிவித்தது  என பாரதி அக்சா தலைமை  நிர்வாக  அதிகாரி  பாரக்  ராஜா தெரிவித்துள்ளார்.


 பசுமை எதிர்காலத்தை உருவாக்கும் மின்சார வாகனம் நிறுவனம்


சென்னை, ஜூன் 11- சென்னை பிஎம்டபிள்யு குரூப் வாகன குழும தொழிலகத்தில் பல முயற்சிகள் மூலம்,சென்னை குரூப் ஒரு பசுமையான மற்றும் சஸ்டைனபுல் எதிர்காலத்தை நோக்கி தீவிரமாக முன்னிலை வகிக்கிறது. அர்ப்பணிப்பு முயற்சிகளால் குறிப்பிடத்தக்க சேமிப்பு ஏற்கெனவே அடையப்பட்டாலும், இந்த ஆலை ஆண்டு இறுதிக்குள் 100% பசுமை மின்சாரமாக மாற்ற உறுதிபூண்டுள்ளது மற்றும் நீர் பாதுகாப்பு மற்றும் மரம் தோட்டம் பல்லுயிர் பெருக்கத்திற்கான புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தி யுள்ளது என சென்னை தொழிலக பிரிவு மேலாண் இயக்குநர் தாமஸ் டோஸ் தெரிவித்துள்ளார்.


தனி மனித இடைவெளியை பின்பற்றி வங்கி சேவை


சென்னை, ஜூன் 11- மாஸ்டர்கார்டு, ஆக்சிஸ் வங்கி மற்றும் வேர்ல்ட்லைன் ஆகியவை  சாஃப்ட்  அறிமுகப்படுத்தியது, இது அன்றாட ஸ்மார்ட் போன்களை வணிக பாயிண்ட் ஆஃப் சேல் டெர்மினல்களாக மாற்றும் இந்தியாவின் முதல் பேமெண்ட் செலுத் தும் சேவையாகும்.இந்த தீர்வு வணிக சமூகத்திற்கான பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.  இந்த தீர்வு குறிப்பாக கோவிட்-19 இன் இந்த சவாலான காலத்தில் சிறு வணிகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறது.


 புதுச்சேரியில் மொபைல் ஏடிஎம் சேவை


புதுச்சேரி, ஜூன் 11- புதுச்சேரியில் ஊரடங்கின் போது வாடிக்கையாளர் களுக்கு உதவ எச்.டி.எஃப்.சி வங்கி மொபைல் தானியங்கி டெல்லர் இயந்திரத்தை (ஏடிஎம்) நிறுத்தியது. மொபைல் ஏடிஎம் பணத்தை எடுக்க வட்டாரத்திலிருந்து வெளியேற வேண்டிய தேவையை குறைக் கும்.  மொபைல் ஏடிஎம் சேவையை புதுச்சேரி முதல்வர்  வி.நாராயண சாமி துவக்கி வைத்தார். புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து உள்ளூராட்சி அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து மொபைல் ஏடிஎம் நிறுத்தப்படுவதற்கான இடங்கள் அடையாளம் காணப்படுகின்றன என இவ்வங்கியின் கிளைத் தலைவர் குமார் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment