தெற்கு ரயில்வே பாதுகாவலர் ஆட்சேர்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பா?
சென்னை, ஜூன் 17- தமிழக எதிர்க் கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சுட்டுரைப்பதிவில் ஆங் கிலத்தில் குறிப்பிட்டு உள்ளதன் தமி ழாக்கம் வருமாறு:
தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்க ளின் பாதுகாவலருக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பிற்கான மற்றுமோர் ஆதாரம்.
இந்த ஆட்சேர்ப்பு முறைமையை மறு ஆய்வுக்கு உட்படுத்து வதோடு சமூகநீதியையும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில், காய்ச்சல் மாத்திரை விற்பனை செய்தால் நடவடிக்கை
சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 17- பெரு நகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மருந்து விற்பனை செய்யும் கடைக்காரர்களின் கூட்டம் கண் காணிப்பு அலுவலர் திரு. எம்.எஸ். சண்முகம் தலைமையில் கடந்த 15.06.2020 அன்று நடைபெற்றது.
ஆலந்தூர் மண்டலத்தில் சற்று ஏறக்குறைய 300 மருந்துக் கடைகள் இயங்கி வருகின்றன, அக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் மருந்து விற்பனை சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்நு கொண்டனர். இக்கூட்டத்தில் மருந்துக் கடைகளில் பதிவு பெற்ற மருந்துவ அலுவலரின் சீட்டு இல்லாமல் காய்ச்சல் மாத்திரைகளை (பாராசிட்டமால், குரோசின் போன்றவை) வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
காய்ச்சல் மாத்திரை வாங்க வருபவர் பெயர் விவரம் பெற்று தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மளிகைக் கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் குரோசின், மெட்டாசின். சாரிடான், அனாசின், விக்ஸ், ஆக்ஷன் 500 போன்ற காய்ச்சல் மாத்திரைகளை பொது மக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறும் கடைக்காரர்கள்மீது காவல்துறைமூலம் உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆலந்தூர் மண்டலத்தில் தினமும் 20 - 24 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதால் பொது மக்கள் அங்கு வந்து மருத்துவ ஆலோ சனை பெற மண்டல கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ். சண்முகம் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment