சிவகங்கை, ஜூன் 17- சிவகங்கையில் இறந்த டெய்லர் உடலைத் தானம் செய்ததால், அவ ருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந் தது. இதையடுத்து அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிவகங்கை மாவட் டத்தில் தொடக்கத்தில் 12 பேர் பாதிக்கப் பட்டு, அனைவரும் குணமடைந்தனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்கள், சென்னையில் இருந்து வருவோரைப் பரி சோதித்து வருகின்றனர்.
இதில் சென்னையில் இருந்து வந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று மருத்துவப் பணியாளர் உட்பட 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சிவ கங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். மேலும் ஜூன் 14ஆம் தேதி சிவ கங்கை மேலூர் ரோட்டைச் சேர்ந்த டெய்லர் காசி (72) இறந்தார். அவரது இறுதிச்சடங்கில் ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற னர். மேலும் அவரது உடலை அவரது குடும்பத்தினர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாகக் கொடுத்தனர்.
இதையடுத்து அவரது உடலை பரி சோதித்துப் பார்த்தபோது, அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால், அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றோரை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் இறுதிச் சடங்கில் பங்கேற்றோருக்கு சிக்கல் ஏற் பட்டுள்ளது.
மேலும், சிவகங்கையில் கரோனா சமூ கப் பரவலாகிவிட்டதா என்ற அச்சமும் சுகாதா ரத் துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment