ஒற்றைப் பத்தி : உ.பி. ராமராஜ்ஜியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

ஒற்றைப் பத்தி : உ.பி. ராமராஜ்ஜியம்


மருத்துவப் பணியாற்றுவதிலும் ஜாதிக் கண்ணோட்டம் என்றால், அதனைச் சகித்துக் கொள்ள முடியுமா?


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆம் பகுதி தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பது வெறும் நாக்கை வழிக்கும் சட்டம்தான் போலும்.


இந்தியாவின் தலைநகரமான டில்லியில் அருகே என்ன நடந்து கொண்டுள்ளது?


இந்தப் படம் எதைக் காட்டுகிறது? அது உணர்த்துவது என்ன? நோயாளி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவராக இருந்து, டாக்டர் உயர்ஜாதிக்காரராக இருக்கும் பட்சத்தில், தூரத்தில் நிறுத்தி மருந்து, மாத்திரைகளைக் கொடுப்பதும் சர்வ சாதாரணம்.


உ.பி. தலைநகரமான லக்னோவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதுமையுடைய பெண் ஒருவருக்கு வெப்ப நிலையைச் சோதிக்கும் இலட்சணம்தான் இந்தப் படம்.


டாக்டரின் பின்புறத்தில் அனுமன் படம் மாட்டியிருப்பதையும் காணத் தவறக் கூடாது.


உ.பி. முதலமைச்சர் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் காலனி பகுதிக்கு வருவார் என்றவுடன், முதல் நாளே அதிகாரிகள், காலனிவாசிகளாகிய தாழ்த்தப்பட்டோருக்கு சோப்பு, பவுடர் சகிதங்களை வழங்கினார்கள் என்ற செய்தி வெளியானதையும், இதனோடு இணைத்துப் பாருங்கள் - ஒன்று புரியும்!


பி.ஜே.பி. கூறும் ராமராஜ்ஜியம், இந்து ராஜ்ஜியத்தின் இலக்கணம் ஈதே காண்! ஈதே காண்!


 - மயிலாடன்


No comments:

Post a Comment