இதுதான் கடவுள்சக்தியா , ராஜஸ்தானில் ஜெகநாதருக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 26, 2020

இதுதான் கடவுள்சக்தியா , ராஜஸ்தானில் ஜெகநாதருக்கு கரோனா தொற்று

இதுதான் கடவுள்சக்தியா?


ராஜஸ்தானில் ஜெகநாதருக்கு கரோனா தொற்று?


14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட ஜெகநாதர்



பிகானேர் ஜூன் 26, ராஜஸ் தான் மாநிலத்தில் உள்ள பிக்கானேர் ஜெகநாதர் கோவில்பார்ப்பன அர்ச்சகர் கூறும் போது ஜெகநாதருக்கு தொடர்ந்து 365 மணி நேரம் அபிசேகம் செய்தோம், இதனால் ஜெகநாதர் மற்றும் அவரது சகோதரி சகோ தருக்கு குளிர்காய்ச்சல் சளித் தொல்லை ஏற்பட்டு விட்டது இதனைஅடுத்துஅவர்களை தனிமைப்படுத்தி ஆயுர்வேத மூலிகைச்சாற்றை கொடுத்து வருகிறோம், இந்த நேரத்தில் எந்தபக்தர்களும் ஜகநாதரை தரிசிக்க அனுமதி இல்லை. அதே போல் பூஜையில் உடனிருந்த கணேஷ்மற்றும் இதர தேவிகளும் தனிமைப் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் பிராமண்போஜன் (பார்ப்பனர் பரேட்) அதா வது பக்தர்கள் கட்டாயம் கோவிலுக்குவந்த பார்ப்பனர் களுக்கு அவர்களால் இயன்ற தானத்தை கோவில் வாசலில் இருக்கும் உண்டியலில்பணம், பாத்திரங்களில் தானம், இதர வஸ்திர தானம், பசுதானம் ஸ்வர்ண தானம் போன்ற வற்றைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.


2002ஆம் ஆண்டு ஜெகநாதர்இவ்வாறு உடல் நிலை சரியில்லாமல் இருந்த தாகக்கூறி, மூன்று கிலோ தங்கம் மற்றும் 17 பசுக்கள் உள்ளிட்ட தானியம் மற்றும் 40 லட்சம் பணம் கிடைத்தது. இந்த ஆண்டு சூரிய கிரகணம் முடிந்த பிறகு பூரி ஜெக நாதர்தேர்திருவிழா நடக்கும் அதன் பிற்கு மக்கள் கொடுத்த தான வகைகளை கணக்கிட்டு ஜெகநாதருக்கு கொடுப் போம் என்று கூறினார்.


கோவிலை நிர்வாகிக்கும் பார்ப்பனர் ஜகநாத்பாண்டே கூறும் போது பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு எங்களுக்கு எந்த தொடர் பும் இல்லை. சுமார் 2000 ஆண்டுகளாக எங்களது பரம்பரை இந்த கோவிலை நிர்வாகித்து வருகிறோம். இடையில்கோவிலின் வரவு செலவை காட்டச்சொல்ல் பூரி ஜெகநாதர் கோவில் நிர்வாகம் எங்கள்மீதுவழக்கு தொடர்ந்தது,  எங்களுக்கு பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு தொடர்பு இல்லை. அவர்கள்ஆண்டிற்கு ஒருமுறை சிலையை மாற்று வார்கள். நாங்கள் 18 ஆண்டு களுக்கு ஒருமுறைசிலையை மற்றுவோம் என்று நீதிமன் றத்தில் கூறினோம். வழக்கு இன்றும் விசாரணையில் உள்ளது. இருப்பினும் எங்கள் உரிமைகளை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.


அப்பாவி பக்தர்களின் மூடநம்பிக்கையை பயன் படுத்திக்கொண்டு பார்ப் பனர்களின் அறுவடைகள் இப்படித்தான் மதத்தின் பெயரால், கடவுளின் பெய ரால் சுரண்டல்கள் நடந்து வருகின்றன. 


 


No comments:

Post a Comment