டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு, சீனா இந்திய எல்லையில் கால் பதித்துள்ளது என அருணாச்சல மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி., தபீர் காவோ கூறியுள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகன்னாதர் கோயில் சார்பில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற இருந்த ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா பாதிப்பின்போது, இதை அனுமதித்தால், பகவான் ஜெகன்னாதரே மன்னிக்க மாட்டார் என நீதிபதிகள் கூறினர்.
- சென்னை நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, வருவாய் இழந்த மக்கள் சென்னை நகரை விட்டு தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முற்பட்டுள்ளனர். செங்கல்பட்டு டோல் கேட் அருகில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வரிசையில் காத் திருந்தன.
- தமிழ் நாட்டின் ஊர்களின் பெயர்களைத் தமிழில் உள்ளவாறு ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற தமிழக அரசின், பல குழப்பத்தை ஏற்படுத்தியதால், ஆணையை திரும்பப் பெற்றதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.
தி இந்து, டில்லி பதிப்பு:
- நமது ராணுவ வீரர்களை நிராயுதபாணிகளாக எல்லைப் பகுதிக்கு அனுப்பி அவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான வர்கள் யார்? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
- குடந்தை கருணா,
19.6.2020
No comments:
Post a Comment