பிரேதப் பரிசோதனைக் காட்சியை பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை, ஜூன் 24- சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வருபவர் பென்னிங்ஸ் (31). கடந்த 20ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்தது தொடர் பாக காவல்துறையினர் பென்னிங்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் இருவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத் துள்ளனர்.
இதற்கிடையே, கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிங்ஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந் தார். மகன் பென்னிக்ஸ் நேற்று முன்னாள் (ஜூன் 22) அன்றிரவு உயிரிழந்த நிலையில் தந்தை ஜெயராஜ் நேற்று காலை உயிரிழந் தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக மகளிர் அணிச் செயலாளர் கனி மொழி எம்.பி., தமிழக காவல்துறை தலை வர் (சட்டம் ஒழுங்கு) திரிபாதியிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: சாத் தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென் னீஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரண மான உதவி ஆய்வாளர்கள், காவல்துறையினர், சம்பந்தப்பட்டோர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயராஜ் மனைவி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சாத்தான்குளத் தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று இறந்த தந்தை, மகன் இருவர் உடலையும் 3 மருத்துவர் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித் துள்ளது.
மனித உரிமை ஆணையம்
மேலும், சாத்தான்குளத்தில் விசார ணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்து 4 வாரத் தில் பதிலளிக்க வேண்டும் என சிறைத்துறை ஏடிஜிபி-க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
இதற்கிடையே வணிகர்களான தந்தை மகன் இருவரின் மரணத்துக்கும் நீதி கோரி வணிகர்கள் கடைஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment