டெக்கான் கிரானிகல், சென்னை பதிப்பு:
- உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் ஏன்? என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
- ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, கடந்த பத்து நாட்களில் இரண்டு லட்சத்தில் இருந்து மூன்று லட்சமாக அதிகரித்துள்ளது.
- இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தங்கள் கட்சி இருப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியதை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள் ளார். மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு அளித்திட மோடி அரசை ஜே.பி. நட்டாவும், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானும் அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
- தமிழ் நாட்டில் கரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண் ணிக்கை 400-அய் அடைந்தது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தினசரி 2000 என்ற அளவை எட்டுகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
- மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 50% இடங்கள் தர வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக, மதிமுக மனு செய்துள்ளன. முன்னர் திமுக மனு செய்துள்ளது. துவக்கத்திலேயே திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
- உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் அளிக்கப்படாத நிலையில் அவர்களுக்கான சான்றிதழ் எதுவும் தற்போது வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தி இந்து,டில்லி பதிப்பு:
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (அய்.சி.எம்.ஆர்)
நடத்திய ஆய்வின்படி, மே மாதத்தில், இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் 62 மாவட்டங்களில் நடத்திய சோதனை மாதிரியின்படி, ஏழு லட்சம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பர் என தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி பதிப்பு:
- கரோனா தடுப்பு நடவடிக்கையில் மோடி அரசு நிறைய தவறுகளைச் செய்துள்ளது. உள்துறை அமைச்சர் அமீத் ஷா காணாமல் இருந்தவர், திடீரென பீகார் தேர்தல் பரப்புரையில் பொய்களை அள்ளி வீசுகிறார். தற்போது உள்ள நெருக்கடி நேரத்தில், மோடியின் நிர்வாகத்திறனைக் காண்பதற்கு நல்ல வாய்ப்பு என எழுத்தாளர் தல்வீன் சிங் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- அண்டை நாடுகளுடனான உறவில் மோடி அரசின் தோல்வி யையும், இந்திய - சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், காங்கிரஸ் தலைவர், மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.
- குடந்தை கருணா,
14.6.2020
No comments:
Post a Comment