பெரியார் பிஞ்சுகளின் பார்வையில் வேலூர் மாவட்ட காணொலி சிறப்புக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 14, 2020

பெரியார் பிஞ்சுகளின் பார்வையில் வேலூர் மாவட்ட காணொலி சிறப்புக்கூட்டம்


வேலூர், ஜூன் 14- 11.6.2020 அன்று மாலை ஆறுமணி அளவில் வேலூர் மாவட் டத்தின் சார்பில் பெரியார் பிஞ்சுகளின் பார்வையில் பல் வேறு தலைப்புகளில் சுவை யான பேச்சரங்கம் காணொலி மூலம் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் மாநில மகளிரணி அமைப்பாளர் ந. தேன்மொழி அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியை சென்னை மண் டல மகளிரணி செயலாளர் ஓவியா அன்புமொழி ஒருங் கிணைத்து உரையாற்றினார். வேலூர் மாவட்டம் சார்ந்த அ.ஜெ ஓவியா “ஜாதி” என்ற தலைப்பிலும், சென்னை பி. லெ.தமிழ்நிலா “பெண்ணு ரிமை” என்ற தலைப்பிலும், திருச்சியை சார்ந்த க.அ. யாழினி “கல்வி” என்ற தலைப் பிலும். ஓசூர்  ல.ம.நன்மதி “கடவுள்” என்ற தலைப்பிலும், தஞ்சாவூர் அ,சித்தார்த் “பெரி யார்” என்ற தலைப்பிலும், குடியாத்தம் சு.அன்புசெல்வன் “சுயமரியாதை” என்ற தலைப் பிலும், திருச்சி பு.வி.கியூபா “மூடத்தனம்” என்ற தலைப் பிலும், திருவெறும்பூர் மு.ம. யாழினி “மனிதநேயம்” என்ற தலைப்பிலும், மேலையூர் இரா.இளவேனில் “கரானோ” என்ற தலைப்பிலும் தங்க ளுக்கே உரிய பாணியில் மிகச் சிறப்பாக உரையாற்றினர். இந்த காணொலி நிகழ்வை மாணவர் கழகம் வி.சி.சங்கநிதி தொகுப்பாளராக இருந்து செயல்பட்டார்.


இந்த நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் இன் பக்கனி, பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், மருத்து வரணி மாநில செயலாளர் பழ.ஜெகன்பாபு மற்றும் வேலூர் மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் மற்றும் பல் வேறு இடங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்ற னர்.


No comments:

Post a Comment