பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் (மனநல மருத்துவமனையில்)கூட 'பிராமணர்'வார்டு இருந்தது தெரியுமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 19, 2020

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் (மனநல மருத்துவமனையில்)கூட 'பிராமணர்'வார்டு இருந்தது தெரியுமா

*மின்சாரம்



'ஒரு தரம் கை தட்டுங்கள்'


இடஒதுக்கீட்டை ஆகா எப்படி கிண்டல் அடித்துக் கீழே தள்ளி விட்டது ஆரியம் (துக்ளக்).


'இன்னொரு தரம் கை தட்டுங்கள்'


இடஒதுக்கீடு என்றால் இந்த இழிகுண பார்ப்பனர் களுக்கு உடம்பெல்லாம் எப்படி எரிகிறது பார்த்தீர்களா?


இதில் மருத்துவர் இராமதாஸ் அவர்களை முன்னி லைப்படுத்தி கிண்டல் செய்திருக்கலாம் (இப்பொழுது தெல்லாம் பார்ப்பனர்கள் பற்றி அவர்தான் கண்டு கொள்வதில்லையே!)


பார்ப்பனர்களைப் பொறுத்தவரை இடஒதுக்கீடு ஆதரவாளர்கள் யார்? எதிரிகள் யார் என்பதுதான் மிக முக்கியம்.


அந்த வகையில் மருத்துவர் இராமதாசை தங்களின் எதிர் வரிசைப் பட்டியலில்தான் வைத்திருக்கிறார்கள்.


அது எப்படியோ போகட்டும்.


இந்தப் பிரச்சினை இடஒதுக்கீடு சம்பந்தப்பட்டதால் நாம் தலையிடுவது அவசியமாகிவிட்டது.


அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைச் சேர்க்கும் போது ஜாதி பார்த்துச் சேர்க்கப்படுவதில்லை.


கல்வியிலும், வேலை வாய்ப்பிலும்தான் இட ஒதுக்கீடு என்பதற்கான காரணங்கள் எத்தனை எத்தனையோ உண்டு.


சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் பார்ப்பனர்களின் இந்துத் துவாவின் அடிப்படைச் சித்தாந்தம்.


அதனால்தான் நமது முட்டாள் அரசர்கள்கூட பார்ப்பனர்களுக்குத்தான் கல்விக் கூடங்களைத் திறந்தார்கள் என்பது வரலாறு.


இடஒதுக்கீட்டின் காரணமாக, மேலே உயர்ந்து நிற்கிற நமது குப்பன் அய்.பி.எஸ். அதிகாரிமுன் - கான்ஸ்டபிள் குப்புசாமி அய்யர் சல்யூட் அடிக்கிறார். அய்.ஏ.எஸ். அதிகாரியான ஆதி திராவிடர் அதிகாரிக்கு முன் ஆராவமுத அய்யங்கார் ‘டவாலி’யாக நிற்கும் நிலை.


போதும் போதாததற்கு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டத்தின் காரணமாக, மதுரையையடுத்த தல்லாகுளம் அய்யப்பன் கோயி லுக்கு மாரிசாமி என்ற பிற்படுத்தப்பட்டவர் அர்ச்சகர் ஆகி விட்டார். ஆராவமுத அய்யங்கார் இப்பொழுது அந்தக் கோவிலுக்குப் போகவே மாட்டாரா, அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டாரா அல்லது என் பெயருக்கு அர்ச்சனை பண்ணுங்கோ என்று கெஞ்சுவாரா?


பிர்மாவின் முகத்தில் பிறந்ததாக மக்களை நம்ப வைத்து, ஊரையடித்து உலையில் போட்டு வந்தவர் களை இந்தச் கதிக்கு ஆளாக்கி விட்டார்களே இதற் கெல்லாம் காரணம் இந்தப் பாழாய்ப் போன இடஒதுக் கீடுதானே என்கிற  ஆத்திர நெருப்பு  அவாளை அணுஅணுவாகத் துடிதுடிக்கச் செய்கிறது. அதன் வெளிப்பாடுதான் இது.


சரி... அவாள் சொல்லுவதற்கே வருவோம். மருத்துவ மனைகளில்கூட பிராமணாளுக்கென்று வார்டு இருந்தது தெரியுமா?


மதுரையில் நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் சுயமரியாதை வீரர் மதுரை முத்து அவர்கள் அதை எடுத்துச் சொன்னதுண்டு.


இன்னும் ஒரு ‘நகைச்சுவை’... சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் (பைத்தியக்கார ஆஸ் பத்திரி என்று அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த சொல்லாடல் இது) பார்ப்பனர்களுக்கு என்று தனி வார்டு இருந்தது தெரியுமா? (வைத்தியத்தில்கூட பிராமணர், சூத்திரர் வேறுபாடா-வெட்கக் கேடு!)


இந்த யோக்கிய சிகாமணிகள்தான் கரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனையில் அனு மதிப்பதை இடஒதுக்கீட்டோடு முடிச்சுப் போட்டு, முன் குடுமிகள் தைதக்கா என்று குதிக்கின்றனர்.


இன்னொன்றை ‘சர்வ ஜாக்கிரதையாக’ மறந்து விட்டாரே கணக்கப்பிள்ளை குருமூர்த்தி.


உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந் தோருக்கு 10 விழுக்காடு மருத்துவமனையில் ஏன் ஒதுக்கவில்லை என்ற கேள்வியையும் அந்தக் கார்ட்டூனில் இணைக்காதது ஏன்?


என்ன தளுக்கு - தந்திரப் பாரிஜாதம்!


இந்த நேரத்தில் 2011ஆம் ஆண்டில் (ஆகஸ்டு 7) மதுரையில் நடந்த ஒரு மாநாட்டை நினைவுபடுத்துவது பொருத்தமானது. அப்பொழுதுதான்இந்தக் குடுமிகளின் குள்ள நரித்தந்திரத்தின் குட்டு உடைந்து சிதறும்.


தேவேந்திர குல வேளாளர் மாநாடு என்ற ஒன்றை சிலரைப் பிடித்து ஏற்பாடு செய்தவர் இதே குருமூர்த்திதான்.


அந்த மாநாட்டு மேடையில் அமர்ந்தவாள் எல்லாம் குருமூர்த்தி உட்பட அவாள்தான் - விதிவிலக்கு அமித்ஷா (காரியம் ஆக வேண்டுமே!)


தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உட்பட அனை வரும் தரை டிக்கெட்தான் - அதாவது தரையில் நாற்காலியில்.


அதில் தேவேந்திரகுல வேளாளர் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு மார்தட்டிய திரு. தங்கராசு என்ற தோழர் என்ன பேசினார் தெரியுமா?


“கோவிலுக்குப் போக முடியாதவர், பசுவைத் தெய்வமாக வணங்காதவர், மாட்டிறைச்சி உண்பவர் தன் இனத்தில் இறப்பவரின் உடலைத்தாமே அடக்கம் செய்பவர், ஒருவரைப் பார்த்தாலோ, தொட்டாலோ தீட்டு என்று கருதப்படுபவர் ஆகியோரே  தீண்டத் தகாத ஜாதியினர் என்கிறது மனு. ஆனால் எங்கள் சமூகம் இவற்றில் எந்தக் கூறுகளிலும் இடம் பெறாத சமூகம். எங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம்;' தேவேந்திர குல வேளாளர் என்ற தனியாக அறிவிக்க வேண்டும் என்று பேசினாரே அந்தத் தோழர்.


ஆம்; இதைத்தானே ஆரியம் எதிர்பார்க்கிறது  மட்டத்தில் உசத்தி என்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாக வேண்டும்- மனுதர்மத்தையும் ஏற்க வேண்டும் என்று சாமர்த்தியமாக எவ்வளவு அழகாக தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே காயை நகர்த்தி, தங்களைக் குஷிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்கிவிட்டார் குருமூர்த்தி-பார்த்தேளா!


அண்ணல் அம்பேத்கர் சொன்ன ஏணிப்படி ஜாதி அமைப்பு முறைக் கொடூரத்திற்கு, ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டே பட்டாபிஷேகம் செய்து முடித்து விட்டாரே!


அந்த மாநாட்டில் திருவாளர் குருமூர்த்தி என்ன பேசினார்? “இடஒதுக்கீடு தேவையில்லை என்று சம்பந்தப்பட்ட சமூகத் தலைவர்களே கூறும்போது, மத்திய அரசு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று பேசினாரே.


பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா ஏன் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார் என்ற சூழ்ச்சி இப்பொழுது தெரிந்திருக்குமே!


அமித்ஷாவுக்கோ கொள்ளை மகிழ்ச்சி. அவர்களின் சித்தாந்தமே இடஒதுக்கீட்டை ஒழிப்பதுதானே! இந்த நிலையில் ஆண்டாண்டு காலமாக உரிமை மறுக்கப் பட்ட மக்களிடமிருந்து இப்படி ஒரு ‘குரல்Õ வந்தால் உச்சிக்குடுமிகளுக்கு உற்சாகம் பீறிடாதா?


அடுத்தடுத்த நிகழ்வுகள்தான் முக்கியம். தேவேந்திர குல வேளாளர் சமூகத்திலிருந்து 101 தோழர்களை டில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க வைத்தனர். அப்பொழுதும் உடன் இருந்து சந்து செய்வித்தவர் இந்தக் குருமூர்த்திதான்.


அமித்ஷா, அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் உடனிருந்தனர்.


பிரதமரைச் சந்தித்தபின் வெளியில் செய்தியாளர்கள் சந்திப்பு (எல்லாம் திட்டமிட்ட ஏற்பாடே!) அப்பொழுது தோழர் தங்கராசு சொன்னதுதான் முக்கியம்.


"இடஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் என்று எங்களை அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தபோது பிரதமர் மோடி சாகேப் அவர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.


(இவர்கள் ஏதோ தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஏகபோக பிரதிநிதிகள் என்று நினைப்பு!)


சரி இவ்வளவும் நடந்ததே அதற்குப்பின் என்ன நடந்தது? மாநாட்டுக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா?


அய்ந்தாண்டுகள் ஓடி விட்டனவே, மாநாட்டை நடத்திய ஆசாமிகள் எங்கே? பிரதமரைச் சந்தித்த 101 பேர்களும் இப்பொழுது எந்த மனநிலையில் இருக் கிறார்கள்? குறைந்தபட்சம் வாக்குறுதி கொடுத்த வாத்தியார் குருமூர்த்தியையாவது அதற்குப்பின் சந்திக்க முடிந்ததா?


ஒரு நாள் கூத்து - ஒருநாள் விளம்பரம்- ஒரு நாள் அற்ப சந்தோஷம் - இடஒதுக்கீடு வேண்டாம் என்று அது தேவைப்படும் மக்கள் வாயாலேயே சொல்ல வைத்தாகி விட்டது - பிற்காலத்தில் எப்பொழுதுதாவது பயன்படும் அல்லவா- அவ்வளவுதான்!


அந்த மாநாடு நடைபெற்ற நிலையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் என்ன சொன்னார்? ‘தி தமிழ் இந்து’ ஏடு (14.8.2015) வெளியிட்டது.


“இந்த ஜாதிய அடுக்குமுறை சூழ்ச்சியைத்தான் அண்ணல் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார். இந்த சூழ்ச்சிக்கு இந்த 2015லும் பலியாகும் பரிதாபத்துக்குரியவர்கள் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை! பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா இதனை வரவேற்கிறார் - பாராட்டுகிறார் என்பதற்கான காரணத்தை எளிதாகவே புரிந்து கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் இந்துத்துவா கோட்பாடு என்பதே ஜாதியைக் கட்டிக் காப்பது தானே!" என்று கூறுகிறார் திராவிடர் கழகத் தலைவர்.


இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா? கடைசியாக திருவாளர் குருமூர்த்தி அய்யருக்கு ஒரே ஒரு கேள்வி.


பிஜேபி தலைவர் ஜே.பி.நட்டா இடஒதுக்கீடுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்கிறார். பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸின் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பின் அகில இந்திய ஒருங் கிணைப்பாளரான சாமிநாதன் குருமூர்த்தி அய்யர் - பிஜேபி தேசியத் தலைவரின் கருத்துக்குக் குழி பறிக்கிறாரே அது எப்படி?


ஓ, குழி பறிப்பதும், குறுக்கில் பாய்வதும்தானே குறுக்கு நூல் அணிவோரின் ஏக போக்குத்தனம்!


No comments:

Post a Comment