* சென்னை - பொது மருத்துவமனை 3,500 படுக்கைகளுடன் கரோனா மருத்துவமனையாக மாற்றம்.
* பி.ஜே.பி. ஆட்சியில் 2,264 ஊடுருவலை சீனா நடத்தியுள்ளது என்று மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
* ஜூலை முதல் வாரத்தில் பன்னிரெண்டாம் வகுப்புத் (பிளஸ் 2) தேர்வு முடிவுகள் வெளிவரும்.
* ஆன்லைன் வகுப்பால் கண்களுக்குப் பாதிப்பா? எழும்பூர் கண் மருத்துவமனை டீன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.
* சென்னை பொது மருத்துவமனை டீனாக டாக்டர் தேனி ராஜன் நியமனம்.
* காலாண்டுத் தேர்வுகளை நடத்துவது குறித்து நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
* டில்லியில் 10 ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட - 870 மருத்துவர்கள் பணியாற்றும் மிகப்பெரிய மருத்துவமனை உருவாகிறது.
* தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரும் அரசின் மனு தள்ளுபடி.
* இவ்வாண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரைப் பயணம் இல்லை - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிப்பு.
* தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
* சீன - இந்திய எல்லைப் பிரச்சினை; மோடி அரசின் மோசமான நிர்வாகமே காரணம் - அ.இ.காங்கிரஸ் குற்றச்சாட்டு.
* பாகிஸ்தானில் 10 கிரிக்கெட் வீரர்களுக்கும், உலக முதல் இட டென்னீஸ் வீரர் ஜோகோவிச்சுக்கும் கரோனா தொற்று.
No comments:
Post a Comment